பக்கம்:கன்னித் தமிழ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை வேண்டாம்!

‘மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன் ஞர்கள். இப்படியும் சொல்வார் உண்டோ? என்று நமக்குத் தோன்றுகிறது. எத்தனையோ காலமாக மழையைக் காணுமல் பஞ்சத்தில் அடிப்பட்ட நமக்கு, “வருமா, வருமா!’ என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆளுல் நமக்கு வேண்டிய மழை பெய்து அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு, குளங் களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், ‘மழையே! மழையே! வா, வா!’ என்றா பாடுவோம்? ‘கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்’ என்றுதான் சொல்வோம்.

மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிப் போகும் எதலுைம் துன்பம் விளைவதுதான் இயற்கை. குறைந்த மழையை அநாவிருஷ்டி என்றும், மிகு பெயலை அதிவிருஷ்டி என்றும் சொல்வார்கள். இரண்டிலுைம்

துன்பம் உண்டாகும்.

மழை இல்லாமையால், ‘மழை வேண்டும்’ என்று கடவுளுக்குப் பூசை போட்டார்கள்; பழனியைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்த குறிஞ்சிநில மக்களாகிய குறவர்கள் ஆவினன்குடி முருகனுக்குப் பூசை போட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/188&oldid=612944" இலிருந்து மீள்விக்கப்பட்டது