பக்கம்:கன்னித் தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை வேண்டாம் ! - 181

டார்கள். முருகன் திருவருள் செய்தான். மழை பெய்தது. ஆனல் அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. ஆகவே, “கடவுளே! எங்களுக்கு மழை போதும். இந்த மேகங்கள் கீழே வந்து மழை பெய்தது போதும். இனி மேலே போகட்டும்’ என்று மறுபடியும் முருகனுக்குப் பூசை போட்டார்கள். மழை நின்றது. அவர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தாங்கள் விளைத்த தினை யைச் சமைத்துப் பொங்கலிட்டு விருந்துண்டு களிக் கூத்தாடினர்கள்.

இதைப் புறநானூறு என்ற நூலில் கபிலர் என்ற பெரும்புலவர் ஒரு பாட்டில் சொல்கிறார்.

மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் மாரி ஆன்று மழைமேக்கு உயர்கென கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல் கண் மாறிய உவகையர், சாரற் புனந்தினை அயிலும் நாட. ‘மலையில் மேகங்கள் வந்து சூழட்டும் என்று கடவுளுக்கு உயர்ந்த பூசனைப் பொருளைத் தூவி (வழி பட்டார்கள்), அப்பால் (மழை மிகுதியாகப் பொழிந் தமையால்) மழை நின்று மேகம் மேலே போகட்டும் என்று கடவுளை வழிபட்ட குறவர்கள், மழை மாறி விட்டதனுல் மகிழ்ச்சி அடைந்து மலைச்சாரலிலே உள்ள புனத்தில் விளைந்த தினைச் சோற்றை உண் ணும் நாடனே’ என்பது இதன் பொருள்.

இதே மாதிரி வேறு ஒரு நிகழ்ச்சியைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் பாடுகிறார்.

சோழ நாட்டில் திருப்புன்கூர் என்பது ஒரு தலம். நாடு முழுவதும் மழையில்லாமல் மக்கள் வாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/189&oldid=612947" இலிருந்து மீள்விக்கப்பட்டது