பக்கம்:கன்னித் தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

கன்னித் தமிழ்


அப்போது திருப்புன்கூரிலுள்ள அன்பர்கள் ஆலயத் துக்குச் சென்று சிவபிரானிடம் ஒரு பிரார்த்தனை செய்துகொண்டார்கள். “கடவுளே! உலக முழுவதும் மழை மறந்து நீரற்றுப் போயிற்று. வயலில் நீரில்லை. அதனுல் மக்கள் துன்பப் படுகின்றனர். மழை பெய்யச் செய்து நாங்கள் உய்யும்படி திருவருள் பாலிக்க வேண்டும். தேவரீருக்குப் பன்னிரு வேலி நிலத்தை எழுதி வைக்கிருேம்’ என்று வேண்டிக் கொண் டார்கள். இறைவன் அருளால் மழை பெய்யத் தொடங் கியது. ஊரார் சிவபிரானுக்குப் பன்னிரு வேலியை எழுதி வைத்தார்கள்.

மழை விடாமற் பெய்தது. எங்கும் வெள்ளம் பரந்தது. அளவுக்கு மிஞ்சி மழை பெய்தது. இனிப் பெய்தால் நாடு முழுவதும் நாசமாகும் என்று அஞ்சி அன்பர்கள் மறுபடியும் இறைவனிடம் வந்தார்கள். ‘திருப்புன்கூர்ப் பெருமானே! உன்னுடைய திருவரு ளால் மழை பெய்தது போதும், இனிமேல் மழை வேண்டாம். மழை நின்றால் மறுபடியும் பன்னிரு வேலி தேவரீருக்குத் தருகிருேம்” என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

மழை நின்றது. ஊரார் மறுபடியும் பன்னிரண்டு வேலியை ஆலயத்துக்கு எழுதி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியைப் பின்வரும் தேவாரத் திருப்பாட்டினுல் உணரலாம்.

வையகம் முற்றும் மாமழை மறந்து

‘வயலில் நீர்இல் மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்கனே’ என்ன,

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/190&oldid=1286048" இலிருந்து மீள்விக்கப்பட்டது