பக்கம்:கன்னித் தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை வேண்டாம் ! 183

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்

செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்

- செழும்பொழில் திருப் புன்கூர் உனானே!

“ திருப்புன்கூரில் உள்ள சிவபெருமானே! உலக முழுவதும் பெரிய மழை மறந்து வயலில் நீர் இல்லை. உனக்குப் பெரிய நிலத்தைத் தருவோம். எங்களை உய்யும்படி செய்யவேண்டும்’ என்று வேண்ட, ஒளியை யுடைய வெள்ளை முகிலாகப் பரந்து (கறுத்துப்) பெய்த பெரு மழையால் உண்டான பெரிய வெள்ளத்தை மாற்றி, மறுபடியும் பன்னிரண்டு வேலி நிலம் கொண் டருளிய அருட் செய்கையைக் கண்டு, (நீ வேண்டு வார் வேண்டிய வண்ணம் அருளும் பெருந்தகை என்பதை உணர்ந்து) நின் திருவடியைப் புகலாக அடைந்தேன்” என்பது பொருள்.

முன்னே சொன்னது கொங்கு நாட்டுக் கதை: அதைப் பாடியவர் கபிலர். பின்னே சொன்னது சோழ நாட்டுக் கதை, அதைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/191&oldid=612956" இலிருந்து மீள்விக்கப்பட்டது