பக்கம்:கன்னித் தமிழ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே 1 தி ய க ண்

\

ஆண்மையும் அற நினைவும் ஊக்கமும் அன்பும் உடைய பெருமகன் அவன். அழகும் கற்பும் காதலும் உடைய மடமகள் அவள். இருவரும் மணம் புரிந்து இல்லற வாழ்க்கையில் இன்புற்றிருந்தார்கள். இல் வாழ்க்கையில் செய்ய வேண்டியவற்றைச் செய்வதற் கும், நுகரவேண்டியவற்றை நுகர்வதற்கும் பொருள் இன்றியமையாதது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? - -- - - - - - - - - - -->

அவன் வறுமையில் உழல்பவன் அல்ல. ஆயினும் பொருள் வளம் மிகுதியாக இருந்தால் அறத்தைப் பின்னும் சிறப்பாக வளர்க்கலாம்; அவனும் அவளும் நுகரும் இன்பத்துக்குரிய கருவிகளை மிகுதியாகப் பெற்று நிரப்பலாம். இத்தகைய எண்ணம் அந்த ஆண் மகனுக்கு உண்டாயிற்று. அது அவன் நெஞ்சிலே முளைத்து இலைவிட்டுக் கொடியோடிப் பரந்தது. தன்னைக் காட்டிலும் அதிக வசதிகள் பெற்று வாழ்வாரைக் கண்டபோது அவனுக்கு அந்த எண்ணம் முறுகி வளர்ந்தது. பொருள் ஈட்டுவதற்குத் தக்க ஆற்றலும் பருவமும் அவனிடம் இருந்தன. பொருளால் வரும் விரிவான இன்ப வகைகளையும், செய்வதற்குரிய அறச் செயல்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு இன்னும் நிதியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/192&oldid=612959" இலிருந்து மீள்விக்கப்பட்டது