பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரி அன்னை கோவிலின் தெற்கே மதிலை ஒட்டி பெரிய மணல் பரப்பு உண்டு. அதில் ஆதிசங்க சர் அமர்த் திருக்கும் மண்டபம் தெற்கு நோக்கி இருக்கிறது. அம் மண்டபத்தின் வலது புறம் கைப் பிடிச் சுவரை ஒட்டி தரை மட்டத்திற்கு ஒலைக் குடில் ஒன்று இருக்கிறது. அன்னை மாயம்மாவின் இருப்பிடம் அதுதான். மேற்கு பக்கமும் கிழக்கு பக்கமும் அதற்கு வாயில்கள் உண்டு. ஒலைக் குடிலின் கீழ்ப்புறம் பாறைகள் நிறைந்த பகுதி. ஒலிக்கும் கடலின் உப்பு நீர்த்துளிகள் அப் பாறைகளில் மோதி ஓவெனச் சத்தமிட்டு குடிலின் கீழே வரும்; சில சமயம் அதற்கு மேலும் நீர்த்துளிகள் தெறிக்கும். காலை வைத்த ல் வழுக்கி விடுமோ என்ற அச்சத்தை ஊட்டும் பச்சை நிறப் பாசிகள் அப் பாறைகளை மூடி யிருக்கும். காலைக் கதிரவனின் கதிர்கள் பரந்த கடலில் பட்டுத் தெறித்து உடம்பின் உள்ளே நேராகப் பாய்கின்ற தேசம். அன்னை மாயம்மாவைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் அதே நேரத்தில் பல முறை கண்டிருக்கிறேன். அப்போது அம்மாவை அறிந்தவர்கள் குறைவு. அம்மா அப்போது செய்த செயலைத்தான் இப்போதும் செய்கிரும். ஆளுல் அன்று யாரும் அவர் செயலுக்கு உதவவில்லை. அம்மா அப்படித்தான் இருக்கிருர். கற்றிய கூட்டம் அம்மாவைப் புரிந்திருக்கிறது. குமரி அம்மனின் நேர் பார்வையின் கீழே உள்ள கடலை ஒட்டிய பகுதியைக் காயத்ரி தீர்த்தம் என்பர். அப் பகுதியில் பெரிய சிறிய பாறைகள் உண்டு. அதைச் சுற்றி உள்ள இடங்களில் குவிந்து கிடந்த குப்பை களைப் பொது க்கிக் கொண்டிருந்தார் அம்மா.