பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஏழு


சரோஜினி அம்மா தீவிரமான மாயி பக்தை. கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தின் காரியதரிசியாக இருந்தவர். விவேகானந்தபுரம் அஞ்சல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிகின்றார்.

அவர், அன்னை மாயம்மா தேவியின் அற்புத வரலாறு என்ற துண்டு வெளியீட்டில் (pamphlet) மாயம்மாவோடு தனக்குரிய உறவைக் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

"அன்பே உருவமாக புன்னகை தவழும் முகமுடன் உலகப் பற்று எதுவுமே இல்லாமல் அன்னை மாயம்மா கன்னியாகுமரி கடற்கரையில் வீற்றிருக்கிறார்.

இந்தத் தாய் நாற்பது வருடமாக இங்கிருந்தும் இவர் எங்கிருந்து வந்தார் எப்படி வந்தார் என்று யாருக்குமே தெரியாது.

அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் அது ஹிந்தியா, மராட்டியா என்று யாருக்குமே புரிந்து கொள்ள முடியாது. யார் எந்தப் பாஷையில் பேசினாலும், அதையே திருப்பி பேசுவார்.

இந்தத் தெய்வம் தன்னுடன் நான்கு நாய்களைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறது. இது தனக்குக் கிடைக்கின்ற ஆகாரங்களை நாய்களுக்கும் ஊட்டி தானும் உண்ணுகிறது.

காசோ பணமோ எது கிடைத்தாலும் அதைத் தனக்குத் தோன்றியவருக்குக் கொடுத்து விடுவார் அம்மா.

இந்தத் தெய்வத்தை இருபது வருஷங்களுக்கு முன்னாலேயே தான் பார்த்திருந்தும் அவர் யாரென்று அறியாமலேயே இருந்தேன். ஆனால் அவர் அருளாலே ஆறு-