பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யாரெல்லமோ கூறுகின்றார்கள். ஆனால் நான் அம்மா அற்புதம் காட்டியதை நேரில் கண்டதில்லை. அதே சமயத்தில் அம்மாவின் சக்தியால் ராஜம்மா என்பவருக்கு அதிசய சக்திகள் வந்தது எனக்கு நன்கு தெரியும்.

இராஜம்மாவிற்கு 55 வயது இருக்கும். சுசீந்திரத்தில் முன்பு இருந்தார். அவர் மாயம்மாவின் பக்தர், அம்மாவைத் தரிசிக்க அடிக்கடி கன்னியாகுமரிக்கு வருவார்; அவரது உறவினர்கள் அம்மாவைப் பழித்த போது கூட அதைப் பொருட்படுத்தாமல் அம்மாவை வழிபட்டவர் அவர்.

ராஜம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும், ஒரு முறை என் வீட்டிற்கு ராஜம்மா வந்திருந்தார். அப்போது கார்த்திகை மாதம், என் வீட்டில் ஐயப்ப பூஜை நடந்து கொண்டிருந்தது.

ராஜம்மா படத்தின் முன்னால் நின்று ஐயப்பனைத் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவர் கையிலிருந்து திருநீறு விழுந்தது ; சந்தனம் வழிந்தது. நான் திகைத்துப் போய் "என்ன அக்கா இது கையிலே சந்தனம்' என்று கேட்டேன். அவர் அமைதியாக “ஒன்றுமில்லை எல்லாம் அம்மாவின் அருள் தான்" என்றார்.

ஒரு முறை சுசீந்திரம் கோவிலில் நானும் ராஜம்மாவும் ஆஞ்சநேயரைத் தொழுது கொண்டிருந்தோம். அப்போதும் அவர் கையிலிருந்து பாலும் குங்குமமும் வந்ததைக் கண்டேன்.

நான் அறிந்த வரை அம்மா மூலமாக அற்புதங்கள் பெற்றவர் இராஜம்மா ஒருவர் தான்.

அம்மா இப்படி ஒரு அற்புத சக்தியை அவருக்குக் கொடுத்ததாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. நானும் இராஜம்மாவும் மாயம்மாவிடம் சென்ற போது எந்த வேறுபட்ட உணர்வுமின்றியே இருவருடனும் பழகினார்.