பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1974ல் ஜப்பான் நாட்டிலிருந்து யோகி ஒருவர் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். அவர் அம்மாவிடம் அதிக ஈடுபாடுடையவர்.

அம்மாவிற்கு உண்பதற்கு எதாவது வாங்கிக் கொடுப்பார். கொடுத்து விட்டு சற்றுத் தள்ளி நின்று கொண்டு அவர் உண்பதையே பார்த்துக் கொண்டிருப்பார்.

அம்மா அவருக்கு உண்பதற்கு எதாவது கொடுத்தால் உண்ண மாட்டார். அதை வாங்கிப் பக்கத்துக் கல்லில் வைத்து விட்டு அமைதியாக இருப்பார்.

தினமும் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறுதியில் அவர் உண்ணாமலேயே உயிரை விட்டார். கன்னியாகுமரியிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.



எ ட் டு


கன்னியாகுமரியில் மாயம்மாவைத் தெய்வீக புருஷியாக்கியது சில நிகழ்ச்சிகளும் அவரது கைராசியும்தான். அதன் பிறகே அவரது அருள் வழங்கும் தன்மையை எல்லோரும் புரிந்தார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

எங்கோ இருந்து வந்த ‘டுரிஸ்ட் பஸ்’ கன்னியாகுமரி சாலையில் படுத்திருந்த ஒரு நாயின் மீது ஏறிவிட்டது; நாய் அலறியது ; அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

நாயின் வயிறு கிழிந்து குடல் வெளியே தள்ளியது. அந்த நேரத்தில் மாயம்மா வந்தாள். துன்பமுற்றுக் கிடந்த நாயைத் தன் மடியில் தூக்கி வைத்துத் தடவிக்