பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கன்பூசியஸின்

கல்வித்துறையை ஒரு இருக்கோயிலாக எண்ணிய அவர், அதன் வாயிலாக ஒரு மாபெரும் சாதனையை உருவாக்கினார்! என்ன அந்த சாதனை?

3. சுயமாய் சிந்திப்பதே அறிவு, தலைக்குள்ளே திணிப்பதல்ல

ஞானி கன்பூசியஸ் பிறப்பதற்கு முன்பே சீனாவின் கல்வித்துறை மேன் மக்களின் மேற் பார்வையிலும், பணக்கார பரம்பரைகளின் பராமரிப்பிலும்தான் இருந்து வந்தது.

பொது மக்களுக்கோ, ஏழைகளுக்கோ, நடுத்தரக் குடிமக்களுக்கோ கல்வித் துறைப் பிரிவுகளைக் கற்பித்திட தனிப்பட்ட ஆசிரியர்களோ அல்லது வேறு கல்வி நிலையங்களோ, தனியார் நிறுவனங்களோ, கன்பூசியஸ் வாழ்ந்த காலத்திலே இல்லை.

அந்த நிலையை முதன் முதல் சீன நாட்டில் மாற்றி அமைத்துக் கல்விப் புரட்சியைச் செய்தவர் கன்பூசியஸ்! அதனால் பொது மக்களும், ஏற்றத் தாழ்வற்ற முறையில் சாதி பணம், உயர் பிறப்பு தகுதி போன்ற வித்தியாசங்கள் போன்ற வித்தியாசங்கள் எல்லாம் இல்லாமல் சமத்துவமாகக் கல்வி கற்றிடும் முறையை இவர் உருவாக்கினார்!

பணம் என்பதல்ல எதைக் கொடுத்தாலும் கல்விக்குரிய கவியாகப் பெற்றுக் கொண்டு கல்வியைப் போதிப்பார் கன்பூசியஸ்; ஆனால் கல்வி கற்கும் ஆர்வம் இல்லாதவர்களுக்கும், சிந்திக்கும் திராணியற்றவர்களுக்கும் என்ன கொடுத்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர் பெறமாட்டார். கல்வியையும் கற்றுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்.