பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கன்பூசியஸின்

கஸ்டான். அதனால் 'சி' அரசில் சரணடைந்தான். 'லூ' அரசில் கலகமும்-குழப்பமும் பலமாக உருவானது.

இந்தச் சூழ்நிலையின் விளைவாக, கன்பூசியஸ் 'சீ' அரசுக்கு ஓடி செனகோ என்ற சீமானிடம் செயலாளராகப் பதவி வகித்து வாழ்ந்து வந்தார். இந்தப் பதவிக் காலத்தில்தான் இவர் நடனம், சங்கீதம் முதலிய கலைகளை ஆர்வமுடன் கற்றார், அதே நேரத்தில் 'சிங்’ சீமானின் சிநேகமும் அவருக்குக் கிடைத்தது. இருவரும் அரசியல் முதலான பல விஷயங்கனைப் பற்றித் தங்களுக்குள் அறிவு வாதம் செய்து கொண்டார்கள்.

கன்பூசியஸ் வாதத்தின்போது எதிர்பாராமல் வந்து வீழ்ந்த அரசியல் கருத்து வீச்சுக்கள் சிங் சீமானின் மனதை முழுமையாக சரித்து விட்டன. நிஷி என்ற பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற நிலங்களை கன்பூசியசிற்கு அன்பளிப்பாகக் கொடுக்க அவர் முன்வந்தபோது, 'யீங்' என்ற அவருடைய அமைச்சன் குறுக்கிட்டான்.

கன்பூசியசின் அரசியல் வாதங்களைக் கொண்டு ஓர் அரசு வாழமுடியாது. அதை ஏற்றால், மக்களுக்கும் அரசுக்கும் மோதல், கலகம், குழப்பம் மூண்டு அழிவுதான் சூழும். அதனால், அவர் கூறுவதையெல்லாம் நம்பி ஆட்சி செய்யமுடியாது, என்று கோள்மூட்டி, இவரைப் பதவியை விட்டு நீக்கித் துரத்திவிட்டான்!

என்ன செய்வார் கன்பூசியஸ்? தமது குருகுல மாணவர்கள் பின் தொடர, ஒவ்வொரு சீன நாட்டு அரசவைப் படிகட்டுகளில் ஏறி ஏறி இறங்கினார்! என்ன லாபம்?

அப்போதைய அரசுகளின் புரட்சிகளுக்கு இடையே நாடோடி போல இவ்வாறு சென்று கொண்டிருந்த கன்பூசியசும் அவரது மாணவர்களும், ஒரு மலையோரப் பாதையிலே இருந்து அலையலையாக ஓடிவரும் அழுகை ஓசையைக் கேட்டு, யாரோ ஒரு பெண், இந்த நேரத்தில் தனியாக, பயம் சூழ்ந்த மலையோர இடுக்கில் புலம்பு-