பக்கம்:கபாடபுரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கபாடபுரம்


புரியாமல் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது சாரகுமாரனுக்கு.

"கோ நகராகிய கபாடபுரத்தின் அரசவையில் பெரும் புலவர்கள் அனைவரையும் கூட்டிய அரங்கத்தில் இசை நுணுக்கத்தை அரங்கேற்றவேண்டும் என்று விரும்புகிறேன் நான். பெரிய பாண்டியரிடம் இதை எடுத்துக்கூறி அவருடைய இசைவைப் பெறவேண்டும்" என்று சாரகுமாரனிடம் விளக்கினார் சிகண்டியாசிரியர்.

"நாமிருவருமாகச் சென்று பாட்டனாரிடம் கூறினால் அவர் அவசியம் இணங்குவாரென்று நம்புகிறேன்” என்று சாரகுமாரன் கூறத்தொடங்கியதை மறுத்து,

"நான் ஒருவனே சென்றால் பெரியபாண்டியர் ஒருவேளை இந்த அரங்கேற்றத்திற்கு இணங்கினாலும் இணங்கலாம். இளையபாண்டியரும் உடன் வந்தாலோ பெரியவருக்கு உலகத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்துவிடும். மறுத்தாலும் மறுத்துவிடுவார்" என்றார் சிகண்டியாசிரியர். ஆசிரியரின் இந்தக் கருத்தில் இளையபாண்டியனுக்குச் சந்தேகம் எதுவும் உண்டாகவில்லை. அதனால் அவன் அவர் விருப்பப்படியே செய்ய இணங்கினான். ஆனால் ஒன்றை மட்டும் சிகண்டியாசிரியரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினான்.

"இசைநுணுக்கம் என்ற தங்கள் நூல் தோன்றக் காரணமாயிருந்தவளும் அந்த அரங்கேற்றம் நிகழ்கிற அன்று இந்த அரண்மனையில் வந்து இசைக்கவேண்டும் என்பது என் விருப்பம்" என்று சாரகுமாரன் ஒவ்வொருமுறை கூறும் போதும் சிகண்டியாசிரியர் உள்ளுற வருந்தினார். "கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பாண்மகள் வந்து பாடவேண்டும்" என்று வேண்டினால் பெரியபாண்டியர் இசைநுணுக்க நூலை அரங்கேற்றவே ஒப்புக்கொள்ளமாட்டாரென்று தோன்றியது. அதை இளையபாண்டியனிடமும் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார்.அவர் சாரகுமாரனின் தந்தை அநாகுல பாண்டியனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/180&oldid=490111" இலிருந்து மீள்விக்கப்பட்டது