பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

103

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க என்று பல தடவைகள் கோஷம் செய்தார்கள். அந்த வீரப் பெரும் முழக்கங்களின் ஆரவார ஓசைகளுக்கு இடையே கவர்னர் ஜெனரல் ‘சிதம்பரம்’ என்ற அந்தக் கப்பலை ஓட்டினார். அப்போது நடைபெற்ற அக்கப்பலோட்டும் விழாவிலே அவர் வாயாரப் புகழ் மாலைகளைச் சிதம்பரத்துக்குச் சூட்டினார்.

சிதம்பரம் பிள்ளை தனது தாய்நாடான இந்தியாவுக்காக நடத்திய சுதந்திரப் போர் வெற்றி பெற்றதை மக்கள் கண்ணாரக் கண்டு களித்து மீண்டும் மீண்டும் சிதம்பரம் பிள்ளை தொண்டுகள் வாழ்க என்று போற்றி மகிழ்ந்து கலைந்தார்கள். ஆனால், அந்தப் பேரின்ப விழாவைக் கண்டு மகிழ வீரப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், கவியரசர் பாரதி பெருமகனும் இல்லையே? அவர்களது உடல்கள் மறைந்தாலும் உணர்வலைகள் அந்த விழாவிலே மிதந்து கடலலைகள் மூலமாக எதிரொலித்துக் கொண்டே இருந்தன.