பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கப்பலோட்டிய தமிழன்

ஆஷ் துணை ஆட்சியராகப் பதவியிலிருந்த காலத்தில் தேசியவாதிகளையும் தொண்டர்களையும் கொடுமைப்படுத்தியதற்கெல்லாம் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று மக்களிலே சிலர் அதற்கான சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

1911-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 17 ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ்துரை கொடைக்கானல் என்ற குளுகுளு நகருக்குச் சென்றார். அப்போது, வாஞ்சிநாதன் என்ற வாலிபர் மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ஆஷ்துரையைத் தனது துப்பாக்கியால் கட்டுக் கொன்றார்

தன்னை யாராவது அடையாளம் கண்டு கொண்டால் அது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் ஆபத்தாகி விடுமே என்றஞ்சி, அந்த வாலிபர் தனது வாய்க்குள்ளே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் தலை சுக்கல் சுக்கலாகச் சிதறி மாண்டார்.

ஆஷ் துரையைக் கொன்றவர் யார் என்ற புலன் விசாரணையின் போது, செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு வழிப்போக்கர். ஆஷ் கொலையாளி செங்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் ரகுபதி ஐயர். அவர் வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் என்றும் கூறிவிட்டார்.

அதே நேரத்தில் கலவரமாகிவிட்ட நெல்லை போலீஸ் துறையினர் இறந்து விட்ட வாஞ்சிநாதன் சட்டைப் பையிலே இருந்த கடிதங்களைச் சோதனையிட்டுப் பார்த்தார்கள்.