பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

; : 9 : : திருஉடையும் மணிமார்ப நினக்கென்னை செயல்பால ஒருவினையும் இல்லாற் போல் உற்ஙகுதி யால் உறங்காதாய் என்றும், "அரவாகிச் சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் அருவாயின் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தி ஆல் திருவான நிலமகளை, ஈதறிந்தால் சீறாளோ? மருவாரும் துழாய் அலங்கல் மணி மார்பின் வைகுவாள். என்றெல்லாம் வாழ்த்துகிறான். இதில் இராமபிரான் திருமாலே என்பதாகக் கூறுவதைக் காண்கிறோம். சரபங்கன் தவம் செய்து கொண்டிருந்த வனத்தை இராமன் வந்தடைந்த போது இந்திரன் அவனை வாழ்த்துகிறான். "மேவாதார் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை. மூவாதமையில்லை, மூத்தமையும் இல்லை. முதல் இடையோடும் ஈறில்லை முன்னோடு பின் இல்லை தேவா இங்கு இவ்வோ நின் தோன்று நிலையென்றால் சிலை ஏந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக் காவாது வுழியின் பழி பெரிதோ அன்றே, கருங்கடலில் கண் வளர்ந்தோய் கைம்மாறும் உண்டோ? என்றும், "ஒன்றாகி மூலத்து உருவம் பலவாகி, உணர்வும் உயிரும் பிறிதாகி, ஊழி சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகித்