பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 8 : : "அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் அரந்து அறைந்த நீதி திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித்தியோர் இறந்துறுக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் என்றும் இராமபிரானுடைய அவதாரத்தையும் அவதாரப்பெருமைகளையும் பற்றியும் அனுமன் குறிப்பிடுகிறான். இங்கு திருமாலே தன் இடத்தை விட்டு இராமனாக அவதரித்து அயோத்தி வந்து வில்லேந்தி அறத்தை நிலை நிறுத்தியதாக அனுமன் குறிப்பிடுவது சிறப்பாகும். இது கம்பனுடைய இராமாயணப்பாடலாகும். வாலி மீது இராமன் அம்பெய் தான். வாலி சோர்ந்து வீழ்ந்தான். தனது உடம்பிலே பாய்ந்திருந்த அம்பை இழுத்துப்பிடித்து அது யாருடையது என்று பார்த்தான். அதில் இருந்த பெயரைக் கண்டான். அதுபற்றிக் கம்பன "மும்மை சால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்" என்று கம்ப நாடார், இராமபிரானுடைய கடவுள் தன்மையைத் தெளிவுபடக் கூறுகிறார். மேலும் வாலி, தனது ஆவி போகும் வேளையில், "ஆவி போம் வேலை வாய் அறிவு தந்து அருளினாய், மூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ மற்றும் நீ பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ, என்று இராமபிரானின் கடவுள் தன்மையைக் றுகிறான். இராமபிரான் பாதம் பட்டவுடன் சாபம் நீங்க தனது சொந்த உருவம் பெற்ற விராதன். "பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளித் இருவினையும் உடையார் போல் இருந்தவம் நின்று இயற்றுவார்.