பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

; : 7 : : "மக்களுடைய நம்பிக்கையும் வழிபாடும் இவ்வாற பரிணமித்து விட்ட பிறகு, கம்பரோ, துளசி தாசரோ மிண்டும் ராமனை எப்படி வீரனாக வைத்துப் பாட இயலும்? அப்படிப்பாட முயன்றாலும் அது வீணாகும். கம்பரும் துளசிதாசரும் பரிபூரண பக்தரர்கள். ஆழ்வார்களே யாவார்கள். அவர்கள் தற்கால சரித்திர ஆராய்ச்சியாளர்கள், அல்லது நெடுங்கதை எழுத்தாளர்களைப் போன்றவர்கள் அல்ல இராமாவதாரத்தை வால்மீகியைப் போல் வெறும் ஒரு வீர புருஷனைப்பற்றிய கதையாக எழுத முடியாத நிலையிலும், காலத்திலும், கம்பரும் துளசி தாசரும் பாடினார்கள். ராமனை மானிடப்பிறவியில் அடக்கக் கம்பருடைய பக்தி இடம் தரவில்லை. ஆனபடியால் கம்பராமாணத்தில் அடிக்கடி, மிக ரசமான இடங்களில் ராமன் மகாவிஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம் பொருளே என்று வைத்து மனதை உருக்கும் முறையில் அற்புத அழகோடு பாடியிருக்கிறார்." என்று மூதறிஞர் இராஜாஜி வர்கள் மிக அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார். கம்பர் தனது மகா காவியத்தில் இராமபிரானைப்பற்றிக் குறிப்பிடும் பகுதிகளில் சிலவற்றைப்பாருங்கள். சீதா பிராட்டியைத் தேடிச் சென்ற அனுமன், இலங்கை சென்று அதனுட் புகுந்து அசோக வனத்தில் சீதையைக் கண்டு விட்டுத்திரும்பிய போது, இங்கு வந்த தன் அறிகுறியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று கருதி அங்கிருந்த சோலைகளை சிதைத்தான். அப்போது தன்னை எதிர்த்த அரக்கர்களைக் கொன்றான். அரக்கர்களுக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. கடைசியாக இந்திரசித்தன் நான் முகன் படையை ஏவி அனுமனைக் கட்டி இராவணன் சபைக்குக் கொண்டு சென்றான். அரக்கன் சபையில் அனுமன் தசமுகனை நேருக்கு நேராக சந்தித்தான். இராவணன் அனுமனைப் பார்த்து "யார் நீ, இங்கு ஏன்வந்தாய், உன்னை விடுத்தரவர் யார்" எனக் கேட்க, அனுமன் "வில்லி தன் துதன் யான்" என்று குறிப்பிட்டு அவ்வில்லியின் பெருமையைப் பற்றிக் றுகிறான். "வேதமும் அறனும் சொல்லும் மெய் அறமூர்த்தியே அந்த வில்லோன்" என்றும் "மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன், கைவில் ஏந்திச் லமும் திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்"என்றும்,