பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 10 : : திறத்து உலகம் தானாகிச் செஞ்சவே நின்ற நன்றாய ஞானத்தனிக் கொழுந்தே நங்கள் நவைதீர்க்கும் நாயகமே நல்வினையே நோக்கி நின்றாரைக் காத்தி அயல்பேரைக் காய்தி நிலையில்லாத் தீவினையும் நீத்தது அன்றே என்றும் இராமபிரானை மூலப் பொரு ளான திருமாலாக வாழ்த்தி வணங்கிச் செல்கிறான். இவையெல்லாம் கம்பனு டைய பக்திக் கருத்துக்கள் நிறைந்த அருஞ்சொற்களாகும். கவந்தன் இராம இலக்குவர்களின் வாளால் தோள்கள் அறுபட்டவுடன் கவந்தன் தனது முந்தின திவினைகளை முடித்து சாபம் நீங்கி, இராமனை வாழ்த்துகிறான். 'ஈன்றவனோ எப்பொருளும் எல்லை தீர்நல்லறத்தின் சான்றவனோ தேவர் தவத்தின் தனிப்பயனோ "மூன்று கவடாய் முளைத் தெழுந்த மூலமோ தோன்றி அருவினையேன் சாபத்து இடர் தொலைத்தாய்” என்று தொடங்கி, “ஆதி பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ சோதி நீ, சோதிச் சுடர்ப்பிழம்பும் நீ என்று வேதம் உரை செய்தால் வெள்.காரோ வேறுள்ளார் என்று இராமனை ஆதிமூலப்பொருளாக வாழ்த்தி வணங்கிச் செல்கிறான். சுக்கிரீவன் இராமபிரானை அடைந்தான். இருவரும் சந்தித்தனர். அப்போது சுக்கிரீவன் றுகிறான்.