பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

::11 : : "நோக்கினான் நெடிது நின்றான் நொடிவரும் கமலத்து அண்ணல் ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்றுகாறும் பாக்கியம் புரிந்த எல்லாம் அன்று தொட்டு இன்று காறும் பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இருபடிவம் ஆகி, மேக்குயர் தடந்தோள் பெற்று வீரராய் விளைந்த' என்பான் தேறினான், 'அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறி இப்பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி, மன்னோ ஆறு கொள் சடியத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுன குடுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே" என்ற சுக்கரீவன் இராமபிரானின் தெய்வத் தன்மையை வியந்து கூறுகிறான். இராவணனடைய மந்திராலோசனை சபையில் வீடணன் : "தன்னில் முன்னிய பொருள் இலா ஒரு தனித்தலைவன், அன்னமானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான்" என்று குறிப்பிடுகிறான். இறுதிப் போர் இராமனுக்கும் இராவணனுக்கும் இறுதிப் போர் தொடங்குகிறது. அப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போது கம்பர். "கருமமும் கடைக்கண்உறு ஞானமும் அருமை சேரும் அவிஞ்ஞையும் விஞ்ஞையும் பெருமைசால் கொடும்பாவமும் பேர் கலாத் தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார்" என்று குறிப்பிடுகிறார். இருவருக்கு மிடையில் கடும்போர் நடைபெறுகிறது.