பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 12 : : இராவணன் விட்ட படைகளையெல்லாம் இராமன் பயனற்றுவிழும்படி செய்தான். இராவணனுடைய பலம் குன்றி வந்தது. இராவணன் மாயக்கணையை ஏவியபோது இராமன் ஞானக் கணையை விடுத்தான். அது மாயையை மாய்த்தது. இராவணன் தனது வல்லமை மிகக் லப்படையை இராமன் மீது எறிந்தான். அது அவன் மார்பில் பட்டுப் பொடிப்பொயாய் உதிர்ந்தது. அப்போது இராவணன் இந்த இராமன் யார்? என்று எண்ணுகிறான். "சிவனோ அல்லன், நான் முகன் அல்லன் திருமாலாம், அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்றான். தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன், இவனோதான் அவ்வேத முதற் காரணன்? என்றான், என்று இராமனை வேத முதற் காரணன் என்று, முழு முதல் கடவுள் என்று கருதுவரைக் கம்பன் மிக அற்முதமாகத் தனது அழகு மிகு கவிதையில் எடுத்துக் றுகிறார். வீடணன், இராமபிரானைப் பற்றி இராவணனின் எடுத்துக் றும் போது, இரணியன் கதையை எடுத்துக் றி இராவணனுக்கு புத்தி புகட்ட முயல்கிறான். இரணியன் யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவன். "பூதம் ஐந்தினும் பொருந்திய உருவினால் புரளான்வேதம் நான்கினும் விளம்பிய பொருள் களால் விளியான், தாதை தான் வந்து தனிக்கொலை சூழினும் சாகான் ஈது அவன் நிலை, எவ் உலகம் கட்கும் இறைவன், என்று இரணியனுடைய பலத்தை மிகவும்