பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

; : 13 : : சிறப்பாகக் குறிப்பிடுகிறான். அவன் இராவணனைக் காட்டிலும் வல்லமிைக்கவன் என்பதைக் கம்பன் எடுதுதுக் காட்டுகிறார். இரணியன் தன்னைத்தவிர வேறு தெயவம் இல்லை என்று தனது ஆட்சியில் நிலைநாட்டியவன். அதை மறத்து அவன் மகன் பிரகலாதன். ஓம் நமோ நாராயணா என்னும் மந்திரச் சொல்லைக்கூறி, இறைவன் இன்னான் என்று விவரித்துக் றியதைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டித்தனது கவிதைகளில் குறிப்பிடுகிறான். "உலகுதந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும் உள் கூற்று அலைவு இலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின்றானும், மலரினில் மணமும், எள்ளில் எண் ணெய்யும் போல எங்கும் அலகில் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா மூன்று அவன் குணங்கள், செய்கை மூன்று அவன் உருவம் மூன்று மூன்று கண் சுடர்கள் சோதி மூன்று : தன் உலகம் மூன்று தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள் கட்கெல்லாம், சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான். என்று மிகவும் அற்புகமாகக் கம்பன் கூறுகிறான். அவ்விறைவன் எங்கு இருக்கிறான். இத்துணில் இருக்கிறானா என்று கேட்ட பொழுது பிரகலாதன். "சாணிலும் உள்ள ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட கோணினும் உளன், மா மேறாகக் குன் நினும் உளன், இந்நின்ற தூணினும் உளன், நீ சொன்ன