பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:: 14 : : சொல்லினும் உளன், இத்தன்மை இத்தன்மை காணு திவிரைவின்' என்று கூறுவதைக் கம்பன் மிக அற்புகமாக எடுத்துக் கூறுகிறார். இரணியன் வதை முடிந்த பின்னர் நரசிம்ம மூர்த்தி சினம் தணிந்து பிரகலாதனுக்கு அருள் புரிகிறார். "நல்லறமும், மெய்ம்மையும், நான் மறையும் நல் அருளும் எல்லையில் ஞானமும் ஈறு இலா எப்பொருளும் தொல்லைசால் எண் குணனும் நின்சொல் தொழில் செய்க மல்லல் உரு ஒளியாய் நானும் வளர்க நீ” என்று நரசிம்மன் பிரகலாதனுக்கு அருள் பாலித்ததை வீடன் இராவணனுக்கு இராமன் பெருமையை எடுத்துக் கூறி நல்லறிவு பெற முயற்சிக்கிறான். "ஈதாகும் முன் நிகழ்ந்தது எம் பெருமான் என் மாற்றம் யாதானும் ஆக, நினையாது இகழ்தியேல் நீதாய் விளைதல் நனி திண்ணம் எனக் செப்பினான் மேதாவி கட்கெல்லாம் மேலான மேன்மையான்' இவ்வாறு வீடணன், முன்பு நிகழ்ந்த இரணியனுடைய கதையை எடுத்துக்காட்டி, இராமபிரானுடைய தெய்வத்தன்மையை சுட்டிக்காட்டி இராவணனுக்கு புத்தி புகட்ட முயல்வதைக் கம்பன் மிக அற்புதமாக எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். இவ்வாறு கம்பர், வால்மீகியைப் பற்றி இராமனைப் பற்றி ஒரு பக்கம் சிறந்த நல்ல குணங்களையும் பண்புகளையும் கொண்ட இராஜ குமாரனாகவும் விவரித்துக் கூறுகிறார், மறுபக்கம் இராமபிரான் திருமாலின் அவதாரம் என்பதை, முழு முதல் காரணன் என்பதை மிகவும் தெளிவாகவும் படிப்போரை ஈர்க்கும் படியாகவும் பண்படுத்தும் படியாகவும் விளக்கிக் கூறுகிறார். அதே சமயத்தில் கம்பனுடைய காவியத்திலும் இராமபிரான் மனித சுபாவத்தில் பலஇடங்களிலும், குறிப்பாக இராவணன் சீதையை அபகரித்துச் சென்ற பின்னர்,