பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 15 : : சீதையைத் தேடிக் கொண்டு செல்லும் போதும் வேறு பல நிகழ்ச்சிகளிலும் மனித சுபாவம் மேலோங்கி யிருப்பதையும் காண்கிறோம். வால்மீகி இராமாயணத்தை எழுதி ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர், கம்பர் தனது இராமாவதாரக் காவியத்தை எழுதியிருப்பதாகக் கணக்கிட்டுக் கூறியுளளார்கள். இந்த நீண்ட காலத்தில் வால்மீகியின் மகாகாவியத்தில் கதைப்போக்கில் பலரும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கக்கூடும். வால்மீகியின் ஸ்லோகங்கள் நெடுங்கவிதை வடிவத்தில் மிகவும் கம்பீரமான தொனியில் கேட்பதற்கு இனிமையாக உள்ளவைகளாகும். காலம் காலமாக அம்மாகாவியம் மக்களுடைய உள்ளங்களில் பதிந்து, அம்மகாகாவியததின் பாத்திரங்கள் பாரத மக்களுடைய வாழ்க்கையில் இணைந்து பதிந்து விட்டவைகளாகும். இமயம முதல் குமரி வரையிலும், இராமன், இலக்குவன், சீஐத, கோசலை முதாலிய பெயர்கள், இல்லாத குடும்பங்கள் ஏது? தமிழிலக்கியங்களில் குறிப்பாக சிலப்பதிகாரம் , நாலாயிரத்திவ்யப்பிரபந்தம், தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகள் மற்றும 'நமது இயல் இசை நாடகங்களில் இராமபிரானின் வரலாற்று நிகழ்ச்சிகள் சிறப்பு குணங்கள் பலவற்றையும் தமிழில் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் கம்பநாடள் இராமாயணம் பாடியதற்கு வெகுகாலத்திற்கு முன்பே சீ ராமகதையைப் பாடியுள்ளதாகத் தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளார் இராம இராவணப் போர் பதினெட்டு மாதங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். இன்னும் ஆய்ச்சியர் குரவைப் பாடல்களில் " மூணவரும் ஈரடியான் முறை நிரம்பாவகை முடியத்தாவிய சேவடி சேப்பத்தம்பி கயாடும் கான்போந்து சேர அரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீரு கேளாத செவியென்ன செவியே, திருமாள் சீர் கேளாதா செவியென்ன செவியே என்று பாடியுள்ளதைக் காண்கிறோம்.