பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: 16 : : பெரியாழ்வார் தனது பாசுரங்களில் இராமகாதையின் பல நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார். "மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடிபத்தும் உடன் வீழ தன்னிகரொன்றில்லாச் சிலை கால்வளைத் திட்ட, மின்னும் முடியற்கோர் கோல் கொண்டு வா" என்றும் "தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணை செய்து மின்னிலங்கும் பூண் விபீடணன் நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலங்காரந்கோர் கோல் கொண்டு வா" என்றும், "என் வில் வலி கண்டு போவென்றெதில் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி, முன்னில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான், தன் வில்லின் வலிமையைப் பாடி பற" என்றும் குறிப்பிட்டுப் பாடுகிறார். இன்னும் பெரியாழ்வார் "சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளம்" என்னும் தலைப்பில் பாடல் தொகுப்பைப் பாடியுள்ளார். "கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கருணனும், தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ" என்றும், 'சென்றங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி" என்றும் திருப்பாவைப் பாடல்களில் ஆண்டாள் குறிப்பிடுவதைக் காணலாம். இன்னும் இதர ஆழ்வார்களும் தங்கள், தங்கள் பாசுரங்களில் இராமபிரான் திருமாள் அவதாரமாக பாவித்து இராமகாதையின் பல அரிய நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்கள். இது போல பண்ட இலக்கியங்களிலும் இராமகாதை நிகழ்ச்சிகளைப் பற்றிய பல குறிப்புகளும் உள்ளன. அத்துடன் தமிழகத்திலும் வேறு பல இடங்களிலும் இராம நாடகம், மற்றும் கூத்துக்கள் மூலமும் இராம காதை மக்களிடம் பரவி வந்துள்ளது. மேலும் பல இராமாயணக்கதை நூல்கள் தமிழில் இருந்தது பற்றியும் பல ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். கம்பன் தனது காவியத்தை எழுதுவதற்கு அவர் காலத்திற்கு முன்னார் தமிழகத்தில்