பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 5 : : சிறந்த ஆழ்ந்த கருத்துக்களும் நிறைந்ததாக, தமிழ் மக்களின் பாரதத்தின் தலை சிறந்த இலக்கியச் செல்வமாக கலாச்சாரக்கருவூலமாகத் திகழ்கிறது என்று கூறலாம். அதனால், தமிழில் உள்ள கம்பனுடைய இராமாவதார மகா காவியம் வான்மீகிக்கு அடுத்தபடியாக அதற்கு இணையீடாக இடம்பெற்றிருப்பதாக அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். காலத்தால் வேறுபாடு கம்பனும் வால்மீகியும் காலத்தால் வேறுபட்டவர்கள். அதனால் அவரவர்களுடைய காலத்தின் சுவடுகள் அவர்களுடைய காவியத்திலும், காவிய நடையிலும், கதைப் போக்கில் பல இடங்களிலும் படிந்திருக்கின்றன. வால்மீகி காலமும் இராமபிரான் ஆட்சி செய்த காலமும் அனேகமாக ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. இராமபிரானுடைய தெய்வாம்சமும் அவதார மகிமையும் வால்மீகி காலத்தில்முழுமையாக அறியப்படாத ஒன்றாகும். இராமன் ஒரு மானுடன், சுத்தவீரன். சத்தியம் தவறாத உத்தமன். அனைவராலும் பின்பற்றக்டிய கல்யாண குணங்களைக் கொண்டவன். இராமன் ஏகபத்தினி விரதன் நாட்டிற்கு கேற்ற சிறந்த அரசன், வீரபுருஷன் தாய் தந்தையர்களுக்கு சிறந்த புத்திரன். உடன் பிறந்தோருக்கு உயர்வான சகோதரன், நாட்டு மக்களுக்கு நல்ல காவலன். ஆயினும் அவ்வப்போது அவனுடைய தெய்வாம்சம் வெளிப்படுகிறது. இராமபிரானுக்கு தான் திருமாலின் அவதாரம் என்னும் நினைவில் இல்லை. வால்மீகியின் கதையில் படி இராமபிரான் தன்னுடைய வரலாறு முழுவதிலும் மனித சுபாவத்திலேயே தனது செயல்களை ஆற்றுகிறான் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். கம்பருடைய காலத்தில் இராமபிரான் உலக மக்கள் அனைவரும் முழு முதல் கடவுளாக, திருமாலின் அவதாரமாக, தனது அவதாரக் கடமைகளை நிறைவேற்ற மனிதனாகப் பிறந்த மாமனிதன். எனவே, கம்பன் தனது மாபெறும் காவியத்தில் இராமபிரானின் திருமாலின் முழுமையான அவதாரமாகவே விவரித்துக் காட்டுகிறார். ஆழ்வார்கள் எல்லாம் இராமாவதாரப் பெருமைகளைப் பாடுகிறார்கள். கம்பரே, கம்பநாட்டாழ்வராகப் போற்றப்படுகிறார். சிலப்பதிகாரம் போன்ற