பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கம்பன் எடுத்த முத்துக்கள் வேரோடிய இந்த அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் பணியைத்தான் இராகவன் ஏவிய கூர் வாளி செய்தது. இக்கிழங்கு எடுபட்டவுடன் தன்னை நாய் போன்றவன் என்ற கருத்தில், நாய் என நின்ற எம்பால்' என்று பேசத் தொடங்குகிறான். இந்த மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது. என்பதை . வாலியின் காட்சியில், எண்ணத்தில், சொல்லில் இம்மாறுபாடு தோன்றிவிட்டது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் சிறியன் சிந்தியாதான் என்ற ஒரே தொடரில் விளக்கிக் காட்டிவிடுகிறான். - பெரிய கோடு என்ற ஒன்றை நினைத்துப் பேசுகின்றோம். அக்கோடு தனியே இருக்கும் வரையில்தான்; அக்கோட்டின் பக்கத்தில் அதைவிடப் பெரிய கோடு வரையப்பட்டவுடன் இதுவரை எதனைப் பெரிய கோடு என்று கூறினோமோ, அதுவே சிறிய கோடு ஆகிவிடுகிறது. உண்மையில் முதல் கோட்டில் மாற்றமில்லை; நம் பார்வையில் வேறொரு கோட்டின் வரவால் மாற்றம் ஏற்படுவதுதான் அதனைச் சிறிய கோடு என்று அழைப்பதற்குக் காரணமாகும். அதே போலப் பகையின்றி அம்பு எய்தல், சோதரர் சண்டையுள் குறுக்கிடுதல், ஒருவன் பேச்சைமட்டும் நம்புதல், மறைந்து நின்று அம்பு எய்தல் ஆகிய செயல்கள் மன மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் உள்ள வாலிக்கு மிகப் பெரியனவாகக் காணப்பட்டன. ஆனால், அக்கட்டுரை மனத்துள் கொண்டு. ஆன்மீகத்தில் மாலென வளர்ந்து விட்ட வாலிக்கு இதே செயல்கள் மிகச் சிறியனவாகவும், அர்த்தமற்றவையாகவும் மாறிவிட்டன. - . . . - கிட்கிந்தா காண்டத்தின் உயிர்நாடியாக உள்ள வாலி வதைப் படலத்தில் கல்வி, கேள்வி, தவம், ஆற்றல் ஆகிய அனைத்தும் நிரம்பப் பெற்று இவற்ற்ன் விளைவாலேயே ஆணவத்தால் மறைப்புண்டு கிடக்கும் ஒர் ஆண்மாவின் வளர்ச்சி, விடுதலை என்பவற்றை வாலியைக் கொண்டு விளக்க முற்படுகிறான் கவிஞன். ஆன்ம விடுதலைக்கு இறுதித் தடையாக நிற்பது ஆணவமே ஆகும். இறையருள் குருவடிவாக வந்து பரிசம், நயனம் முதலியன ஏதாவதொரு வழியில் தீட்சை செய்தவுடன் ஆணவம் கரைந்துவிடுகிறது.