பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கம்பன் எடுத்த முத்துக்கள் ஆராயாமல், குரங்கு என்று அலட்சியப்படுத்தியது தந்தை செய்த தவறு என்பதை அழகாகப் பேசுகிறான், பாசப் படலத்தில். "தந்தையே! குரங்கின் ஆற்றலால் அது இவ்வளவு தூரம் வந்தது என்று அறிந்தும் தக்கவர்களை அனுப்பாமல் கிங்கிரர் முதலானோரை அனுப்பினாய். அடுத்தடுத்துக் கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர் (பஞ்ச சேனாபதிகள்) என்பவர்களோடு சென்ற படையில் ஒருவர்கட மீளவில்லை. இத்தனை பேரையும் ஒரு குரங்கு அழித்தது என்றால் சங்கரன், அயன், மள்ல் என்பவர்களுக்குச் சமமானது அன்றோ? தந்தையே! மேலே கூறப்பட்டவர்களோடு அல்லாமல் அக்க குமாரனையும் கொன்ற குரங்கை எளிதாக வென்று விடலாம் என்று நினைப்பது அறிவுடைமை ஆகாது. என்றாலும் நீ கவலைப்பட வேண்டா. நானே அக்குரங்கினைப் பற்றிவருவேன்' (5725-28) என்று கூறுகிறான். . . . இந்திரசித்து, "ஆயினும் ஐய, நொய்தின் ஆண் தொழில் குரங்கை, யானே "ஏ" எனும் அளவில் பற்றித் தருகுவேன்” (5728) என்று கூறும்பொழுது இராவணனைப் போல் இவன் சிந்திக்காமல் செயல்பட்டான் என்று கூற முடியாது. அந்த ஒற்றைக் குரங்கு சங்கரன், அயன், மால் என்பவர்க்கு ஈடாகும் என்பதை அறிந்தே பேசுகிறான். உலகப் பொதுமறை இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒர் அரசன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறது. . r . வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (48) இந்திரசித்தனைப் பொறுத்தவரை குரங்கின் ஆற்றலை நன்கு அறிந்துகொண்டா னாதலின், மாற்றான் வலிமையை நன்கு கணித்தான் என்பது நன்கு விளங்குகிறது. சாதாரணக் கணைகளால் இவனை அடக்க முடியாது. நான்முகன் படையால்தான் அடக்க முடியும்' என்று அறிந்திருந்தான் என்பதும் பெறப்படும். இதற்கேற்பத் தன் வலியைப் பெருக்கிக்கொண்டு எல்லையற்ற படைகளையும் கொண்டு இவற்றிற்கு மேலாக நான்முகன் படையையும் எடுத்துச் &