பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 225 செல்கின்றான் என்றால், குறளலாசிரியர் கூறும் மூவகை வலியையும் இருள்தீர எண்ணிச் செய்தான் என்பதைக் கவிஞன் பாசப் படலத்தில் விரிவாகச் சொல்கிறான். இராமனின் தொண்டனாகிய அனுமனுக்கு அயன் படையை எதிர்த்து வெல்வது எளிதுதான் என்றாலும், தான் தொண்டன் என்பதை அனுமன் மறப்பதே இல்லை. பூவியல் நறவம் மாந்தி அடிக்கடி புந்தி வேறாகின்ற சுக்கிரீவனிடம் பேசும்போதுகூட அனுமன் தன் நிலையை மறப்பதில்லை. அகங்கார, ம.மகாரங்களை முற்றிலும் களைந்தவனே தொண்டனாக இருக்க முடியும். அத்தகைய தொண்டிற்கு இலக்கிய மாகிய அனுமன் அயன்படையை எதிர்க்கக் கூடியவனே யாயினும் - அதற்குரிய ஆற்றலைப் பெற்றிருப்பினும் அந்த ஆற்றலைப் பயன்படுத்தாமல் அயன் படைக்கு வணக்கம் செய்து, அதனால் கட்டுண்ணுகிறான். அயன் மேல் கொண்ட பக்தியும் மரியாதையும் ஒருபுறமிருக்க இக்கட்டை ஏற்றுக்கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சர்வ வல்லமையுள்ள இராவணனைக் கண்டு, அவனோடு சில சொற்கள் பேசி அவனை எடை போட்டுச் செல்ல வேண்டும் என்பது அனுமனின் எண்ணம். தன்னை ஏவிய இராகவனிடம் சென்று சீதையைக் கண்டதையும் அவள் இருக்கும் நிலையைமட்டும் கூறினால் போதாது. மேலும், அவர்கள் இருவரும் பல நாள் போரிட வேண்டிய இந்திரசித்து முதலானவர்களைப் பார்த்துவிட்டான் ஆதலின், இத்தகைய மகனைப் பெற்ற தந்தையையும் நேரே கண்டு அவனிடம் உரையாடினால் இராமன் ப ைகளு னை ஒரளவு அறிந்துகொள்ள முடியும். இந்தப் பகைவனைப் பற்றிய தகவலை இராமனுக்குத் தராமல், பிராட்டியின் இருப்பைமட்டும் கூறினால் தான் ஒற்றனாக வந்த பணியை முற்றிலுமாகச் செய்தவன் ஆக மாட்டான். எனவேதான், எப்படியாவது இராவணனைக் காண வேண்டும் என்று சிந்தித்த அனுமன், அதற்குரிய ஒரு கருவியாகவே அசோக வனம், சயித்தம் முதலியனவற்றை அழித்தான். இவற்றை அழித்தால் இராவணனிடம் தன்னை அழைத்துச் 15