பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 251 என்றும், அதுவும் அகிம்சையே என்றும் மகாத்மா காந்தி கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இதனை நன்கு புரிந்துகொண்டால், இராமன் செய்த போரும், பாண்டவர்கள் செய்த போரும் வன்முறை அன்று என்பதை அறிய முடியும். செயல் ஒன்றைமட்டும் வைத்துக்கொண்டு, அதனை வன்முறை என்றும், கொலை என்றும் பெயர் சூட்டத் தொடங்கினால், அறுவை மருத்துவமும் கொலையாகவே கருதப்பட நேரிடும். அறத்தின் அடிப்படையில் தீமையை எதிர்த்துப் பேராடுகையில் தன்னலம் என்பது ஒரு சிறிதும் தலைகாட்டக் கூடாது. போருக்குக் காரணம் தன்னலமாக இருக்குமேயானால் அங்கே அறத்தின் துணை கிடைக்காது. இராமன் செய்த போர்கள் அனைத்தும், தன்னைச் சரணடைந்த முனிவர்களையும் ஏனைய மனிதர்களையும் காக்க வேண்டிச் செய்யப்பட்ட போர்களே ஆகும். எனவே, வன்முறை தவிர்ப்பது என்பது வேறு. அறத்திற்காகப் போராடுவது என்பது வேறு. அன்றியும் சமுதாயத் தலைவனாகவும், அரசனாகவும் இருப்பவனுக்குச் சில தனிப்பட்ட கடமைகள் உண்டு. அறத்தையும், நீதியையும் நிலைநாட்டத் தனி ஒருவனையோ அல்லது ஒரு கூட்டத்தையோ போரிட்டுக் கொல்வது அரசனுடைய கடமையாகும். இதன் அற அடிப்படையைக் கூறவந்த வள்ளுவர், : " ' ". . . . ... ... - . . . ." . . கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர், (குறள் - 550) என்றார். . > -- - - எனவே, பிறர் துயர் துடைக்க இராமன் செய்த போர் வன்முறை அன்று என்பதனை மனத்தில் கொள்ள வேண்டும். வன்முறைக்கு அறத்தின் உதவி கிட்டாது என்பதனையும் அறிதல் வேண்டும். வளர்ந்துவரும் சோழப் பேரரசுக்கு போர்புரிந்து, தன் நாட்டை விரிவுபடுத்த வேண்டிய சோழப் பேரர்சுக்கு - சாளுக்கியர், இலங்கையர் என்ற தென் வட எல்லைகளில்