பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் solidusyli, 579 கம்பன் கூறும் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறை தொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது”என்பதை நாம் மிக விரிந்த பொருளில் காண வேண்டும். கம்பன் கூறும் பல்பெரும் சமயம் சொல்லும் பொருள்” என்பது இந்தியச் சிந்தனையில் தோன்றி வளர்ந்த பல்பெரும் சமயம் சொல்லும் பொருளாகும். இங்கு கம்பன் கூறும் பொருள்” என்னும் சொல்லுக்கு மனிதனின் தினசரி வாழ்விற்கு அவசியமான லெளகீக, ஆன்மீகப் பொருள் என்று மட்டும் கூற முடியாது. கம்பன் கூறும் பொருள்” என்பது பரம் பொருள் ஆகும் என்று நமது புலவர்களும் பண்டிதர்கள் சிலரும் பொருள் கூறலாம். ஆனால் பரம்பொருள் என்பதும் கூட, அந்தர் யாமியாக எல்லாவற்றையும் கடந்து தனியாக நிற்கும் தனிப் பொருளாக அல்லாமல், அனைத்து உயிர்ப் பொருள்களிலும் ஜடப் பொருள்களிலும் இன்னும் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள அனைத்துப் பொருள்களிலும், அவைகளின், சாரத்திலும், இயக்கத்திலும், உணர்விலும், உயிரிலும், செயலிலும் மாற்றங்களிலும், உலகம் யாவிலும் பரந்து இணைந்து பரவி நிற்கும் பொருள் என்னும் விளக்கம் கூறலாம். ஆக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமான நிலைகளைக் கொண்டு பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் இடைவிடாத இயக்கத்தில் வளர்ச்சியில் ஒன்றிணைப்பில் செயல் படுவதாக உள்ளது. கம்பனுடைய சமுதாயக் கருத்துக்கள் உயர்வான தத்துவ நிலை கொண்டவைகளாகும். கம்பன் தனது உயர்ந்த மனித நேய சிந்தனையில் கூற்றம் இல்லாத, சீற்றம் இல்லாத, இழி தகவு இல்லாத, ஆற்றலும் நல்லறமும் நிறைந்த சமுதாயத்தை அடையாளம் கண்டுள்ளார். வன்மை இல்லாத, செறுநர் இல்லாத, உண்மையும் பொய்யுமில்லாத கருமையும் வெண்மையும் இல்லாத ஒரு சமுதாயத்தை அயோத்தியில் கண்டிருக்கிறார். கொள்வார்கள் இல்லாமலும் கொடுப்பார்கள் இல்லாமலும் கள்வர்கள் இல்லாமலும், காவல் தேவையில்லாமலும் உள்ள சமுதாயத்தைக் கம்பன் தனது மகா காவியத்தில் காண்பித்துள்ளார். இன்னும் இல்லாமையும் கல்லாமையும் நீங்கி, கல்வியும், செல்வமும் பெருகி, எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் பெற்றுள்ளதால் இல்லாரும் இல்லாத, உடையார்களும் இல்லாத ஒரு உயர்ந்த சமுதாயத்தைக் கல்வி முளைத்து, எண்ணில் கேள்விகள் திண்பனை