பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 587 படித்து அதற்கும் எல்லை கண்டவன் என்று கம்பர் கூறும் போது அதில் கம்பனுக்குத் தமிழ் மொழி மீதுள்ள ஆழ்ந்த பற்றைக் காட்டுகிறது. கம்பன் மொழி வேறு பாடியின்றி தென் மொழி - வடமொழிகளின் ஒற்றுமையை இராமன் மூலம் எடுத்துக் கூறியுள்ளதையும் காணலாம். கம்பன் தமிழையும் (தென் மொழியையும்) சமஸ்கிருதத்தையும் (வட மொழியையும்) நன்கு கற்றவன். கம்பனுடைய இராமனும் இரு மொழிகளிலும் தேர்ந்தவன். இரு மொழிகளிலும் உள்ள அறிவுச் செல்வங்கள் அனைத்தும் இணைந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்கு பயன் பட வேண்டும் என்னும் கொள்கையைக் கம்பன் இராமன் மூலம் எடுத்துக் காட்டுகிறார். இராமன் சீதையுடனும் இலக்குவனுடனும் சித்திர கூட மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். அந்த மலைப் பகுதியின் இயற்கைக் காட்சிகளின் அழகை இராமன் சீதைக்கு எடுத்துக் காட்டிப் பேசுகிறான். “குழுவு நுண் துளை வேயினும் குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கிடை மிடைந்த பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய்! " என்று இராமன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். மிகவும் பொருத்தமான சிறிய துளைகளைக் கொண்ட குழலிலிருந்து வரும் இனிய ஓசையைக் காட்டிலும் குறிப்பிட்ட நரம்புகளைக் கொண்ட தமிழ் யாழிலிருந்து எழும் இனிய இசையைக் காட்டிலும் இனிய குரலுடன் கூடிய சொற்களைக் கொண்ட கிளியைப் போன்ற சீதையே என்று இராமன் குறிப்பிடுவதாக கம்பன் மிக அழகாக வர்ணிக்கிறார். இதில் யாழிசையைப் பற்றிக் குறிப்பிடும் போது அந்த யாழைத் தமிழ்யாழ் என்று கம்பன் குறிப்பிடுவதில் தமி ழின் இனிமையைக் கம்பன் சிறப்பித்துக் கூறுகிறார் என்பதையும், அவன் தமிழின் இனிமையைத் தன் உள்ளத்தில் கொண்டிரு -ப்பதையும் காட்டுகிறது. தமிழின் இனிமையைக் கம்ப ராமன் எப்போதும் தன் நினைவில் தன் உள்ளத்தில் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.