பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 589 “பூவிரி பொலன் கழல் பொருவில் தானையான் காவிரி நாடன்ன கழனி நாடு ஒரீ இத் தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்” என்று கூறுகிறார். காவிரி நாட்டைப் போன்ற வயல் வெளிகள் சூழ்ந்த செழிப்பு மிக்க நாட்டைப் போன்ற சிறப்புகளைக் கொண்ட கங்கைக் கரையைப் பரதன் தன் படை பரிவாரங்களுடன் அடைந்தான் என்று கம்பன் கங்கையின் சிறப்புக்கும் செழிப்புக்கும் காவிரியை ஒப்பிடுகிறார். இராமன் சீதையுடனும் இலக்குவனுடனும் தண்டக வனத்தைக் கடந்து அகத்திய முனிவர் உறையும் சோலையை அடைந்தான். இங்கு அகத்தியன் பெருமையைக் கம்பன் சிறப்பாகப் பேசுகிறார். அகத்தியன் பெருமை ஆரண்ய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் அகத்தியனுடைய பெருமையுடன் இணைத்துத் தமிழின் பெருமையை மிகவும் சிறப்பாகக் கம்பன் விவரித்துக் கூறுகிறார். "ஆண் தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான் ஈண்டு வகை வேலை துணை ஏழுலகம் எய்த மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” இராம இலக்குவர்கள் அங்கே வருகிறார்கள் என்பதை திருமால் உலகைத் தனது கால்களால் அளந்ததைப் போல உலகைத் தமிழால் அளந்த அகத்தியன் அறிந்து, தன்னை வணங்கும் வகையில் இராமபிரானுக்கு எதிரில் வந்தான் என்று கூறுகிறார் Ց5ԼՈԼI6նIT திருமால் வாமனாவதாரத்தில் குறுவடிவத்தில் சென்று தானம் பெற்றுப் பெருவடிவம் எடுத்து உலகைத் தனது காலடிகளால்