பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 590 அளந்தான். அதுபோல குறுமுனி அகத்தியன் துமிழால் தனது தமிழறிவால் உலகை அளந்தவன் என்று கம்பன் குறிப்பிடுகிறார். அத்துடன் நீண்ட தமிழ் என்று கூறும் போது திரி விக்கிரமனுடை வளர்ந்து கொண்டேயிருந்த பெருவடிவிம் கொண்டிருந்த காலடிகளைப் போல நீண்டு கொண்டே உள்ள பெருவடிவத்தைத் கொண்ட தமிழ் என்று குறிப்பிட்டு! தமிழுக்கு எவ்வளவு பெருமையைத் தறுகிறான் கம்பன் என்பதைக் காணலாம். அத்தகைய தமிழுக்குரியவன் அகத்தியன் என்று கூறி மேலும் கம்பன் கூறுகிறார். “உழக்கு மறை நாலினும் உயர்ந்து உலகம் ஒதும் வழக்கினும் மதிக்க வியினும் மரபின் நாடி நிழற் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்,” “கண்டனன் இராமனை வரக் கருணை கூரப் புண்டரிக வான் நயனம் நீர் பொழிய நின்றான் எண் திசையும், ஏழ் உலகும், எவ்வுயிறும் உய்யக் குண்டிகையினில் பொருவில் காவிரி கொணர்ந்தான்,” “நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் அன்றவனும் அன்போடு தழிஇ அழுத கண்ணான் நன்று வரவு என்று பல நல்லுரை பகர்ந்தான் என்றும் உள. தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்.” இவ்வாறு அகத்திய முனிவருடைய தனிப் பெருமைகளைத் தமிழின் பெருமைகளுடன் இணைத்துக் கம்பன் கூறியிருப்பது அவன் தமிழுக்குக் கொடுத்தத் தனிச் சிறப்பாகும். சிவபெருமான் நெருப்பின் ஒளி வடிவம் கொண்டவன், நெருப்பைக் கக்கும் சிவந்த நெற்றிக் கண்ணையுடையவன், ஒளி பொருந்திய மழுப்படையைக் கொண்டவன். அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட ஒளிமிக்க சிவபெருமான் அகத்திய முனிவர்