பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 599 "அன்ன தொண்டை நல்நாடு கடந்து அகல் பொன்னி நாடு பொருவிலர் எய்தினர் செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் ” “தாறு நாறுவ தாழைகள் தாழையின் சோறு நாறுவ தீம்பிழி மாங்கனி நாறு நாறுவ நாறு வளர்க்குறும் சேறு நாறுவ செங்கழு நீர் அரோ! ” இவ்வாறு கம்பன் சோழ நாட்டின் வளத்தைக் குறிப்பிடும் போது அவருடைய தமிழ் சொற்கள் பொங்கி எழுகின்றன. அதையடுத்து தென் தமிழ்நாட்டைப் பற்றிக் கூறும்போது கம்பனுடைய கவிதைகளின் சிறப்பு, தமிழின் தனிச் சிறப்புடன் கலந்து உச்சத்திற்குச் செல்கிறது. அதன் பின்னர் அங்கிருந்து மலைநாடு வழியாக தென் தமிழ்நாடு சென்றனர். “அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் இனி தென் தமிழ்நாடு சென்று எய்தினார்.” சோழ வள நாட்டிலிருந்து இல்லறத்தின் பெருமை விளங்குகின்ற சேர நாட்டை அடைந்து அங்கிருந்து தென்தமிழ் நாடு அடைந்தனர். அந்த தென்தமிழ் நாடு எப்படியிருந்தது? "அத்திருத் தகு நாட்டினை அண்டர் நாடு ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ? எத்திறத்தினும் ஏழுலகும் புகழ் முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்” தென் தமிழ்த் திருநாட்டில் முத்தும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் நிறைந்திருப்பதால் எத்திறத்திலும் ஏழுலகும்