பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•илия — «әФ «Qдэлшu иллюви –ost cosofkилғай! 484 ஆபத்துத்தான். எனவே உன்னையும் உன் தம்பிகயையும் அனுமனையும் என் தம்பி வீடணன் பிரியாதிருக்கும் படியாகப் பார்த்துக் கொள்” என்று இராமனிடம் தனது தம்பிக்காக வேண்டுவது கும்பகருணனுடைய பாத்திரச் சிறப்பு மட்டுமல்ல அதில் ஒரு முக்கியமான அரசியல் நுட்பமும் அமைந்திருப்பதைக் காணலாம். "நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் சாதியால் வந்த சிறுநெறி அறியான் என் தம்பி ஆதியாய் (னை அடைந்தான், அரசன் உருக் கொண்டு அமைந்த வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்.” “வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் ஒல்லுமாறு இயலு மேல் உடன் பிறப்பின் பயன் ஒரான் கொல்லுமால் அவன் இவனைக் குறிக் கோடி கோடாதாய்,” “தம்பியென நினைந்து இரங்கித் தவிரான் அத்தகவு இல்லான் நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால் உம்பியைத்தான், உன்னைத்தான் அனு மனைத்தான் ஒரு பொழுதும் எம்பி பிரியானாக அருங்கி! யான் வேண் டினேன்.” இவ்வாறு கும்பகருணன் தனது தம்பி வீடணனைக் காக்குமாறு இராமனிடம் வேண்டிக் கொண்டு தனது மூக்கில்லாத