பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் தமிழும் 601 "இரும் கவி கொள் சேனை, மணி ஆரம் இடறித்தன் மருங்குவளர் தெண் திரை வயங்கு பொழில் மான ஒருங்கு நனி போயின உயர்ந்த கரை ஊடே கருங் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப.” காவிரி நீர் பெருக்கு, கடலுக்குள்ளே போனதைப் போல வானரப் படை கடலுக்குள் சேதுவின் மீது சென்றது எனக் கூறுகிறார். இன்னும், “ஒதிய குறிஞ்சி முதலாய நிலம் உள்ள கோதில அருந்துவன, கொள்ளையின் முகந்துற்று யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்தப் போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன” என்று கம்பன் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். குறிஞ்சி முதலிய பலவகை நிலங்களிலுமிருந்து உணவுப் பொருள்களையும் இதர பல பொருள்களையும் வாரிக் கொண்டு பொன்னி நதி கடலுக்கு வருவதைப் போல வானரப்படை, அப்படைக்குத் தேவையான பொருள்களை வாரிக் கொண்டு கடலைக் கடந்தது என்னும் மிக அருமையான உவமைக்குக் கம்பன் பொன்னியை எடுத்துக் கொண்டது அவருக்குத் தமிழ் மீதுள்ள ஆழ்ந்த பற்றினாலாகும். மாருதி மருத்துவ மலையைக் கொண்டு வர வடகோடிக்குச் சென்றபோது கம்பன் சுவர்க்கக் காட்சியைக் குறிப்பிட்டுக் கூறும் போது அது பொன்னி நாட்டைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 'வன்னி நாட்டிய பொன் மெளலி வானவன் மலரின் மேலோன் கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும் ஆளும் காணி சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா வினோ தன் தெய்வப் பொன்னி நாட்டு உவம வைப்பைப்புலன் கொள நோக்கிப் போனான்”