பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன - ஒரு சமுதாயப் பார்வை-அ.-சனிவாசன் 602 என்று சுவர்க்க பூமியைப் பொன்னி நாட்டிற்கும் பொன்னி நாட்டை சுவர்க்க பூமிக்கும் ஒப்பிட்டுக் கம்பன் மிகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். இந்திரசித்தன் நடத்திய நிகும்பலை யாகத்தை அழிப்பதற்கு இலக்குவனும் அனுமனும் வீடணனும் செல்லும் போது இராமன் இலக்குவனிடம் தற்காப்புக்கும் தாக்குதலுக்குமான புதிய போர்த் தந்திரங்கள் உத்திகள் பற்றிப்பல ஆலோசனைகளைக் கூறியும் புதிய வில், கவசம், அம்புக் கூடு முதலிய சக்திமிக்க ஆயுதங்களையும் தற்காப்பு சாதனங்களையும், சிவக்கணை, திருமால்கணை நான்முகன் கணை முதலிய தெய்வீகக்கனைப் பற்றியும், அவைகளைப் பிரயோகம் செய்வது பற்றியும் அவைகளிலிருந்துத் தற்காத்துக் கொள்வது பற்றியும் பல விவரங்களையும் கூறுகிறான். ஒரு புதிய சக்தி வாய்ந்த வில்லைக் கொடுத்ததில் அதில் தமிழ் முனி அகத்தியன் கொடுத்த வில் பற்றியும் அதைச் செயல் படுத்துவது பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். “இச்சிலை இயற்கை, மேல்நாள், தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் அச்சு எனக் கேட்டாய் அன்றே? ஆயிர மெளலி அண்ணல் மெய்ச்சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப் பெற்ற கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும்” என்று கம்பன் குறிப்பிட்டுள்ளார். இந்திரசித்தன் இறந்த பின்னர், மூலபலப் படையும் அழிந்த பின்னர் இராவணனே நேரில் போர்க் களத்திற்கு வந்து, முதல் நாளில் இலக்குவனை எதிர்த்துக் கடும் போர் நடத்தி அவனைச் சாய்த்து விட்டுப் போர்க்களத்திலிருந்து மாளிகை திரும்பி மகிழ்ந்திருந்தான். இலக்குவன் மீண்டும் மருந்தால் உயிர் பெற்று எழுந்தான். அதைக் கண்டு வானரப்படை ஆரவாரம் செய்தது. இலக்குவன் மீண்டும் உயிர் பெற்று எழுந்ததை ஒற்றர்கள் கூற இராவணன் முதலில் அதை நம்பவில்லை. பின்னர் நேரிலே