பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப்பற்றி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அனுதாப அலை அவருக்கு எதிராக இருந்தது. எனவே அவர் வெற்றி பெறவில்லை. இரண்டு தடவைகளிலும் இரண்டரை லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றும், மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜனசக்தி வார இதழ், நாளிதழ், மார்க்சீய ஒளி மாத இதழ் ஆகிய பத்திரிகைகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அத்துடன் சாந்தி, ஆர்பர் தொழிலாளி, தொழிற் சங்கச் செய்தி முதலிய பத்திரிகைகளிலும் பளியாற்றியவர். இப்போதும் சுதந்திரமான பத்திகையாளராகவும் பணியாற்றி வருகிறார். திரு. அ. சீனிவாசன் தனது இளம் வயது முதலே தனது தாய் தந்தையர் மூலம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், இராமாயணம், மகாபாரதம் நளவெண்பா முதலிய நூல்களிலும் மற்றும் பாகவதம் முதலிய வைணவ இலக்கியங்களிலும் அறிமுகமாகியவர். விடுதலை இயக்கத்தின் தொடர்பு காரணமாக மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகள், கட்டுரைகள் மீது ஆழ்ந்த பற்று கொண்டு இலக்கியப்படிப்பில் ஈடுபட்டவர். காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்சீய - லெனினியத் தத்துவ ஞானத்தின் அடிப்படைகள், அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், வரலாற்றியல் பொருள் முதல்வாதம், மார்க்சீய தத்துவம், மார்க்சீயமும் பகவத் கீதையும், ஐக்கிய முன்னணித் தந்திரம், முதலிய முக்கியமான பெரிய ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்தவர். மார்க்சீயப் பொருளாதார தத்துவம், கீழை நாட்டு விடுதலை இயக்கம், ஜீவாவின் தமிழ்ப்பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி முதலிய மூல நூல்கள் எழுதியவர். தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம், சமூகவியல் பற்றிய காரல் மார்க்சின் நூல்களையும், இந்திய இலக்கியங்களையும் _தரத்திலிங்களையும் தமிழ் இலக்கியங்களையும் படிதது, பத்திரிகைகளில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவர் “ஜனசக்தி' நாளிதழின் தலைமை ஆசிரியராக இருந்தபோது பாரதி