பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 493 “மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் எண்ணிய உயிர்களெல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் பெண் எனும் பெயர எல்லாம்

)"எண்ணும், எண்ணிப்

புண்.இடை எரிபுக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும்.” தனது வீரமகன் அதிகாயன் போர்க்களத்தில் இலக்குவனால் கொல்லப் பட்ட செய்தியைக் கேட்ட இராவணனுடைய உள்ளம், பார்வை, சிந்தனை, எண்ணம், உணர்வு ஆகியவை எப்படி இருந்தன என்பதைக் கம்பன் எடுத்துக் கூறுவது மிகவும் அற்புதமான கவிதைகளில் அமைந்துள்ளதைக் காண்கிறோம். இலங்கையின் அரசியலும் இராவணனுடைய உள்ளத்தைப் போல பார்வையைப் போல சிந்தனையைப் போலச் சிக்கித் தவித்தது. ஆயினும் இராவணன் தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லை. தனியாண்மை பெயரவில்லை. அதிகாயனுடைய அன்னை தானமாலை, தன் மகன் போர்க் களத்தில் மாண்ட செய்தியைக் கேட்டுப் புலம்புகிறாள். அந்தப் புலம்பலும் ஒப்பாளியும் கூட இலங்கையின் அரசியலை மிக நுட்பமாக வெளிப் படுத்துவதைக் கம்பன் கவிதைகளில் காணலாம். "அக்கன் உலந்தான், அதிகாயன் தான் பட்டான், மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் விடினார் மக்களினில் இன்றுள்ளான் மண்டோதரி மகனே, திக்கு விசயம் இனி ஒரு கால் செய்யாயோ! " “ஏதையா சிந்தித்து இருக்கின்றாய் எண் இறந்த கோதையார் வேல் அரக்கர் பட்டாரைக் கூ வாயோ? பேதையாய்க் காமம் பிடிப்பாய்! பிழைப்பாயோ? சீதையால் இன்னும் வருவ சிலவேயோ? "