பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшөбі – “РФ ~Qрғылшй иліisos» —-9). «зәбылғзді 5|8 அளவிலது அமையவிட்டது இராமனை நீக்கி அன்றால் விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா” "மானிடன் அல்லன்! தொல்லை வானவன் அல்லன்; மற்று மேல்நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யில் சொன்ன யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண் உறும் ஒருவன் என்றே தேன்நகு தெரியல் மன்னா சேகு அறத் தெரிந்தது அன்றே !” நான் மிகுந்த சக்தியுள்ள வல்லமைமிக்க நான்முகன் படைக்கலத்தை ஏவினேன். அது இராமனைத் தீண்டவில்லை. திரும்பி வந்துவிட்டது என்பதை நான் உங்களுக்கு உணர்த்த விரும்புறேன். அவன் சாதாரண மனிதன் அல்லன். அவன் வானவனோ அல்லது மேலான முனிவனோ அல்லன். வீடணன் கூறியதைப் போல யான் என்னுடையது என்னும் எண்ணம் நீங்கிய முழுமுதல் காரணன் என்றே தெரிகிறது என்று கூறிவிட்டு மீண்டும் அது போகட்டும் இருப்பினும் நான் விடப்போவதில்லை. விரைவில் நான் சென்று நிகும்பலை யாகத்தைச் செய்து முடித்துப் பகைவரை அழிப்பேன் என்றும் கூறினான். 「フ ッ2 அணையது பிறவும் நிற்க, அன்னது பகர்தல் ஆண்மை வினையன அன்று நின்று வீழ்ந்தது வீர இனையல்-நீடxண்டுயான்போய் நிகும்பலை ட-விரைவின் எய்தித் துனிஅறு வேள்வி வல்லைத் தொடங்கி னால் முடியும் துன்பம்” என்று இந்திர சித்தன் ஒரு பக்கம் சிந்தனை குழம்பியும் மறுபக்கம் தனி வீரத்துடன் பேசுவதையும் கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.