பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 519 + இந்திர சித்தன் நிகும்பலையாகத்தை முடிக்கச் செல்வதிகு ウ இராவணன் ஒப்புதல் தெரிவித்தான். மேகநாதன் தனது வேள்வியை முடிக்கக் கால அவகாசம் வேண்டியதிருந்தது. அதற்காக ஒரு தந்திரத்தைச் செய்யுமாறு தனது தந்தையிடம் கூறுகிறான். ஒரு மாயா சீதையைக் கொண்டு போய் இராமன் முன்பாக வெட்டிக் கொல்ல வேண்டும். அத்துடன் அயோத்தி மீதும் படையெடுத்து அங்குள்ளவர்களையும் அழிக்கப்போகிறோம் என்று போக்குக்காட்ட வேண்டும். அப்போது இராமனும் அவனுடைய படைகளும் அயோத்திக்குப் புறப்படத் தயாராகும். அதற்குள் நிகும்பலையாகத்தை முடித்துவிடலாம் என்று அத்தந்திரங்களைச் செய்யும்படி இந்திரசித்தன் ஆலோசனை கூறுகிறான். இது ஒரு-முக்கியமான போர்த்தந்திரமாகும், இதற்கு இராவணனும் உடன்பட்டு, அவ்வாறே மாயா சீதைகொண்டு வரப்பட்டு/கொல்லப்படுகிறாள். இராமன் அதைக்கண்டு துயரம் கொண்டு மயக்கமடைந்தான். வானரத் தலைவர்கள் வருத்தம் அடைந்தார்கள். இந்திர சித்தன் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கப் போவதாகப் போக்குக் காட்டுகிறான் என்றும் அதைக்கண்டு இராமனும் இலக்குவனும் அயோத்திக்குப் புறப்படத் தயாராகிறார்கள் என்றும் கதையில் விவரிக்கப்படுகிறது. அப்போது வீடணன் தலையிட்டு அதெல்லாம் வெறும் நாடகம் நீங்கள் அவைகளை நம்ப வேண்டாம், என்று. இலங்கை அரக்கர்களின் சூதுகளையும் தந்திரங்களையும் எடுத்துக் கூறித் தெளிவுபடுத்துகிறார். "பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது முத்திரத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே! இத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன வார்த்தை சித்திரம், இதனையெல்லம் தெரியலாம் சிறிது போழ்தில்’ என்று கூறி, வீடணன் தான் சென்றுச் சீதையைப் பார்த்து வருவதாகக் கூறி வண்டின் உருவம் எடுத்து அசோகவனத்திற்குச் சென்றுத் திரும்பி வந்தான். அங்கு சீதை இருப்பின்த்ம், ! இந்திரசித்தன் நிகும்பலையாகம் செய்யப் போவதையும் அறிந்து வந்து அதை இராமனிடம் தெரிவித்தான்.-இந்திரசித்தன் நிகும்பலை யாகத்தைச் செய்து முடித்துfதிரும்பிவிட்டால், அவனை யாரும் வெல்ல முடியாத அளவுக்குப் ப்லம் பெற்றுவிடுவான். எனவே அவன்