பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшын — «PG5 «Qрятшпи штвови —зу. «Rofkитеosй71 520 யாகத்தைச் செய்ய விடாமல் தடுத்து விட வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறான். இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் வீடணனுடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். அரசியல் தன்மையும் கொண்டதாகும். போரின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் வீடணன் மிகவும் நுட்பமான விவரங்களை எடுத்துக் கூறி இராமனுடைய முழுமையான வெற்றிக்கு உதவுகிறான். இந்திரசித்தனுடைய சூழ்ச்சியைப் பற்றி வீடணன் எடுத்துக் கூறியதைக் கேட்டு இராமனும் வானரப்படைகளும் மகிழ்ச்சி -யடைந்தனர். வீடணனைப் பாராட்டி இராமன் பேசுகிறான். வீரனும் ஐயம் தீர்ந்தான், வீடணன் தன் னை மெய்யொடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத்தழுவி 8:3եւ, தீர்வது பொருளோ துன்பம் நீஉளை தெய் வம் உண்டு, மாருதிஉளன், நாம் செய்ததவம் உண்டு வலியும் உண்டு,ஆல் இந்திரசித்தனுடைய மாயங்கள், தந்திரங்கள் சூழ்ச்சிகள், சாகசங்கள், வஞ்சக முயற்சிகள் முதலியவற்றைப் பற்றி வீடணன் விவரித்த உண்மைகைைளக் கேட்டு இராமனுடைய ஐயப்பாடுகள் தீர்ந்தன. வீடணனை இராமன் கட்டித் தழுவிக் கொண்டான்”. அதுவும், மெய்யொடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்து ரத்தழுவிக் கொண்டான் என்று கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. அத்துடன் நீ இருக்கிறாய்.நம் பக்கம் தருமம் இருக்கிறது. மாருதி இருக்கிறான், 醬 தவம் இருக்கிறது. நம்மிடம் பலமும் இருக்கிறது. அப்படியிருக்க நமது துன்பங்கள் ஒரு பெரிய காரியமல்ல என்று இராமன் கூறுகிறார். இராமன் தன்னைக் கட்டித் தழுவி இவ்வாறு கூறியவுடன், வீடணனும் இராமனை வணங்கி, “இந்த நிகும்பலை யாகத்தை இந்திரசித்தன் நடத்தி முடித்துவிட்டால், அரக்கர்களின் பலம்