பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 533 கிடைக்கட்டும். அதோடு நிறுத்திக் கொள் என்று அமைதியாகக் கூறி முடித்துக் கொண்டான். மேலும் இந்திரசித்தன் வயதில் மிகச் சிறயவன். துடிப்புடன் வார்த்தை மாறிப் பேசுகிறான். எனவே சுருக்கமாகக் கூறி இதோடு நிறுத்திக் கொள் என்று வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான். வீடணனுடைய இந்த வார்த்தைகளில் அமைதியாகத் தரும நெறிகளை எடுத்துக் கூறுவதும் இந்திரசித்தனையும் இராவணனையும் அவர்களோடு சேர்ந்தவர்களையும் அறம் கூறித் திருத்த முடியாது என்றும் கருதி எப்படியும் ஆகட்டும் என்று மனம் நொந்து கூறுவதும் அடங்கியிருக்கிறது. இந்திரசித்தனுக்கும் வீடணனுக்கும் நடைபெற்ற இந்த விவாதம் அரசியல் நெறிமுறை நீதிநெறி முறைக் கருத்துக்களையும் ஒழுக்க நெறிமுறைக் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றன. குலநெறியா அல்லது பொது நெறியா, குலப் பெருமையா அல்லது பொது ஒழுக்கமா, தனி ஆண்மையா அல்லது அறத்தின் நெறியா, மனம் போன போக்கில் செல்வதா அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டு திட்டத்தோடு வாழ்க்கை நெறி முறைகளை வகுத்துக் கொள்வதா என்னும் அரசியல் மற்றும் சமுதாய நெறிமுறைகள் பேசப் படுகின்றன. இந்திரசித்தனிடம் இந்த நெறிமுறைகளைப் பற்றியும் தர்ம நியாயங்களைப் பற்றியும் பேசிப் பயன் இருக்குமா என்னும் சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னைப் பழி கூறியதற்குப் பதிலளித்தும் உண்மை நெறிகளை எடுத்துக் கூறியும் சில விளக்கங்களைக் கூற வீடணன் முயற்சிக்கிறான். இந்திரசித்தன் கேட்ட கேள்விகளுக்கும் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நேரடியாக பதில் இல்லாவிட்டாலும் பொது நெறியையும் அறத்தையும் எடுத்துக் கூறித் தன்னைத் தற்காத்துக் கொண்டும் தனது செய்கையில் உள்ள நியாயத்தையும் நிலை நாட்டுகிறான். அதே சமயத்தில் எதிர் தரப்பைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறான். கள்குடி, பொய்மை, மாயம், வஞ்சகம், காமம், கவறாடல் முதலிய பாவங்களை நீக்கி, அறம், மெய்ம்மை கற்புநிலை காத்து நிற்றல் தனி மனித ஒழுக்கம் ஆகியவைகள் வீடணன் மூலம் வலியுறித்தப் படுகின்றன. வீடணன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இந்திரசித்தன்