பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшын – “РФ «Qрғылшй иптіsosu –o, «Rofkилғай! 534 கோபம் கொண்டு வீடணனைத் தாக்குகிறான். வீடணன் பதிலடி கொடுக்க, அதைத் தாங்க முடியாமல் நிகும்பலை யாகத்தையும் நடத்தவும் முடியாமல் இந்திரசித்தன் இலங்கை நகருக்குள் ஒடி விடுகிறான் என்பதைக் கம்பன் காட்டுகிறார். நிகும்பலை யாகக் களத்திலிருந்து யாகத்தை முடிக்க முடியாமல் இலங்கைக்கு ஒடிய இந்திரசித்தன் இராவணனிடம் போகிறான். தொடங்கிய வேள்வியை முடிக்க முடியாமல் வந்து விட்டாய் போல் தெரிகிறது. மிகவும் தளர்ச்சியுற்றுக் காணப்படுகிறாய். என்ன நடந்தது? என்று தனது அன்பு மகனிடம் இலங்கை வேந்தன் கேட்கிறான். இங்கு இந்திரசித்தன் தன் தந்தையிடம் கூறுவதும் அதற்கு இராவணன் பதில் கூறுவதும், கம்பனுடைய மகாகாவியத்தில் மிகுந்த கருத்துச் செரிவு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இந்திரசித்தன் இராவணனுடைய தலை மகன். மூத்தவன் பட்ட மகிஷியான மண்டோதரி பெற்றெடுத்தவன். அந்த இந்திரசித்தன் இளைஞன். வேகமும் துடிப்பும் மிக்கவன். மிகுந்த வல்லமையும் நல்ல பயிற்சியும் பெற்றவன். மாயப் போர் வஞ்சகப் போர் உள்ளிட்ட பலவகைப் போர்க்கலைகளையும் கற்றவன். எல்லா வகைப் படைகளிலும் அஸ்திரப்பிரயோகங்களிலும் பயிற்சி பெற்றவன். தேவர்களையெல்லாம் வெற்றி கொண்டவன் இந்திரனையை வெற்றி கொண்டதால் இந்த மேகநாதன் இந்திரசித் என்னும் பட்டம் பெற்றவன். பஞ்சபூத சக்திகளையும் வென்று அவைகளை இலங்கை நகருக்கும் அரக்கர்களுக்கும் ஊழியம் செய்ய வைத்தவன். இந்திரசித்தன் பல போர்களிலும் வெற்றி கண்டவன். தோல்வி என்பதையே அறியாதவன். இலக்குவனையும் வானரப் படைகளையும் இருமுறை சூழ்ச்சி மூலம், மாயப் போர் செய்து வீழ்த்தினான். முதல் முறையில் நாக பாணத்தை மறைந்து நின்று ஏவி, இலக்குவனையும் இதர வாணர வீரர்களையும் வீழ்த்தினான். கலுழன் மூலம் விஷம் நீக்கப்பட்டு அவர்கள் உயிர் பெற்று எழுந்தனர். இரண்டாம் முறை இந்திரசித்தன் மறைமுகமாக நின்று நான்முகன் படையைத் தொடுத்து இலக்குவனையும் மற்றும் வானரப் படை முழுவதையும் வீழ்த்தினான். இம்முறை மருத்துவ மலை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்.