பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப்-பார்வை-அ-சீனிவாசன் 550 கனியும் காய்களும் உணவுள, முழை உள காக்க, மனிதர் ஆளின் என்? இராக்கதர் ஆளின் என் வையகம்?" என்பது கம்பனுடைய ஒரு அருமையான ஒரு அற்புதமான கவிதையாகும். உலகில் சாதாரண மக்களில் பலரும் அரசியல் பிரச்னைகளில், அரசியல் விவகாரங்களில் நடவடிக்கைகளில் போதுமான அக்கரை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் நாம் இருவகையில் காணலாம். முதலாவதாக, இருநாடுகள், அல்லது பல நாடுகளுக்கிடையில், அரசர்களுக்கிடையில், ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ, அரசர்கள் தங்கள் சொந்த கவுரத்திற்காகவோ, பெருமைக்காகவோ, தங்கள் விரப் பிரதாபங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவோ, தங்கள் ஆட்சி எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதற்காகவோ சண்டை போட்டுக் கொண்டால், போர்களை நடத்திக் கொண்டால், அதில் சாதாரண மக்களுக்கு என்ன இலாபம் இருக்கிறது? இன்னும் கூறப் போனால், அவர்களுக்கு அத்தகைய போர்களால் துன்ப துயரங்களும், நாடுநகர நாசங்களும் உழைப்பால் பெருகிய செல்வங்களின் அழிவுகளும் தான் அதிகரிக்கும். எனவே அத்தகைய போர்களில் மக்களுக்கு அக்கரையில்லாமல் போவதும் அத்தகைய அரசியலிலும் ஆட்சியிலும் மக்களுக்கு அக்கரையில்லாமல் போவதும் நீண்ட நாட்களாக மக்களிடையில் செய்வதறியாமல் பதிந்து விட்ட மந்த நிலையாகும். அடுத்த படியாக ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காக, நாட்டு மக்களின் விடுதலைக்காக, அல்லது அன்னிய நாடுகளின் அடுத்த நாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து அல்லது ஒரு தருமத்தை ஒரு நியாயத்தை நிலை நாட்டுவதற்காக நடைபெறும் அரசியல் விவகாரங்களில் கிளர்ச்சிகளில் போராட்டங்களில் போர்களில் மக்கள் மந்தமாக அக்கரையில்லாமல் இருக்கக் கூடாது என்பதும் அத்தகைய போராட்டங்கள், போர்களிலிருந்து மக்கள் விலகிச் செல்லக் கூடாது, அதில் மக்களின் மந்த நிலை கூடாது, அம்மந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவும் வேண்டியதாகிறது.