பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 55| இராமாயணப் பெருங்கதையில் இராமன் பாவங்களையும் அதர்மத்தையும் எதிர்த்து, தர்மத்தைக் காக்கவும் நிலை நிறுத்தவும் தலைமையேற்று நடத்தும் யுகப் போராட்டத்தில் எந்தச் சூழ்நிலையிலும் சாதாரண மக்கள் விலகிப் போவது என்பதோ அக்கரை காட்டாமல் மந்தமாக இருப்பது என்பதோ கூடாது என்பதைச் சுட்டிக் காட்டவும் அதுவும் எதிர் காலத்திற்கான படிப்பினையாகக் கொள்ள வேண்டியதையும் சுட்டிக்காட்டவும் வேண்டியதாகிறது. இராமனுடைய பிறப்பின் இலட்சியம் பற்றி, "அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உக நூறித்தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்” என்று அனுமன் குறிப்பிட்டுள்ளதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே ஒரு தரும யுத்தத்தில் ஒதுங்கிப் போவது சரியாகாது என்னும் அரசியல் நீதியை வலியுறுத்தும் முறையிலேயே கம்பன் உலக மக்களிடையே உள்ள 'யார் ாலென்ன? என்னும் மனோ பாவத்தை இலைமறைவு காயாக |சுட்டிக் காட்டியுள்ளார். அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் பாரத மக்கள் ஊக்கத்துடன் கலந் கொள்வதைக் குறிக்கும் வகையிலேயே பாரதி, “நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்ல வர்களாயின் அவரை விழுங்கி ஆனந்தக் கூத்திடுவாள்'