பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сошиэш — 99Ф «Орёлшш шишьольш —est cosofisитеғайт 55.2 என்று பாரதி நமது நாட்டு மக்களின் மரபு வழியிலான இயல்பை நமது நாட்டின் சாத்திரங்களின் நேர் ஆக்க வழி காட்டலைச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம். வானரப் படை பயந்திருந்த நிலையில் அவர்களுடைய பயத்தைப் போக்கி அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம் எனக்கருதி அருளின் ஆழியான் கருணைக்கடல் இராமபிரான், இலக்குவனையும் அவனுக்குத் துணையாக வீடணனையும் மற்றும் சுக்கிரீவன் அனுமன் ஆகியோரையும் வானரப் படையைக் காக்கச் சொல்லிவிட்டு தானே போர்க் கோலம் பூண்டு மூல பலப்படையை எதிர்த்தான். "வில்லினைத் தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேருக் கல் எனச் சிறந்ததேயும், கருணை அம் கடலே அன்ன எல்ஒளி மார்பில் வீரக்கவசம் இட்டு இழை யா வேதச் சொல் எனத் தொலையா வாளித் துணியும் புறத்துத் துக்கி" என்று இராமபிரானே போர்க்கோலம் பூண்டு மூலபலப்படையைச் சங்கிக்க/களம் சென்றதைக் கம்பன் குறிப்பிடுகிறார். மூலபலப்படைகள் மீது இராமன் தனது சக்திக் கணைகளை ஏவி, அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டு அவர்கள் அனைவரையும் வெற்றிகரமாக வீழ்த்தினான். மூலபலப்படையின் அழிவைப் பற்றிக் கம்பன், 'வஞ்சவினை செய்து, நெடுமன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் நெஞ்சம் உடை யோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர், அறம் ஒக்கும் நெடியோன் நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன்