பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 479 உனது அண்ணனைக் கொல்வது நல்லதல்ல என்னும் காரணத்தினால்தான் உன்னை அவனிடம் அனுப்பினேன். இனி வேறு வழியில்லை”என்று எடுத்துக் கூறி/கும்பகருணனை, வீடணன் கண் முன்னாலேயே கொல்வதற்கு ஒரு அரசியல் மற்றும் போர் உபாய நியாயத்தையும் இராமன் வகுத்துக் கொள்கிறான். வீடணனுக்கு இராமன் கூறிய கருத்தைக் கம்பன் தனது கவிதையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். “கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் நொய்தினில் துளக்கி, ஐய! நின் எதிர் நும் முன்னோனை எய்து உறத்து னித்து வீழ்த்தல் இனிது அன்றென்று இனைய சொன்னேன் செய்திறன் இனி வேறுண்டோ? விதியை யார் தீர்க்ககிற் பார்? ” அரசியலிலும் போர் நடவடிக்கைகளிலும் வெறும் மன உணர்ச்சிகளுக்குப் பொதுவாக இடமில்லை என்றாலும் இராமாயணப் போரில் இராமன் தனது வெற்றிக்காக மிகவும் நுணுக்கமாக, உபாயங்களையும், உத்திகளையும் கையாண்டு வியூகங்களை வகுத்துத் தனது போர் நடவடிக்கைகளை மிகவும் நிதானமாக நடத்திக் கொண்டு செல்கிறான். பாச உணர்வில் பாதிக்கப் பட்ட வீடணன், கும்பகருணப் போரின் போது களத்தில் காணப்படவில்லை. வேறு வேலைகளுக்காகப் போர்க் களத்தின் பின் அணியில் இருந்ததாகத் தெரிகிறது. கும்பகருணன் நடத்திய போர் மிகக் கடுமையாக இருந்தது. அங்கதன் கும்பகருணனை எதிர்த்தான். அங்கதன் சோர்வடைந்தான். மாருதி தலையிட்டு கும்பகருணனுடன் மோதினான். அதிலும் அவன் கலங்கவில்லை. பின்னர் இலக்குவன் அவனை எதிர்த்து மோதினான். இராமன் தம்பியும் இராவணன் தம்பியும் போர்க் களத்தில் மோதினார்கள். அப்போது கும்பகருணன் இலக்குவனிடத்தில் “என் உடன் பிறந்தவள் ஒரு பெண் கொடி. அவள் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவளுடைய நாசியை அறுத்தாய். அவளுடைய கூந்தலைத் தொட்டு இழுத்து அவளுடைய