பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. sihusyth Jreflugylii, 555 அந்த வலுமிக்க வேல்படை வீடணனை நிச்சயமாகக் கொல்லவல்லது. எனவே வீடணனை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்று கருதி இலக்குவன் இடையில் புகுந்தான். அடைக்கலம் புகுந்தவனை அழியப் பார்ப்பது தருமம் அல்ல. நாம் அழிந்தாலும் பரவாயில்லை என்று இலக்குவன் இராவணனுடைய வேல் படையைத் தாங்கினான். அந்த வேல் படை இலக்குவனுடைய மார்பில் புகுந்து அவனை வீழ்த்தியது. “தோற்பின் என்னினும் புகழ் நிற்கும் தருமrமம் தொடரும், ஆர்ப்பர் நல்லவர் அடைக்கிலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்? நெடும் பழி தொடர்வதன் முன்னம் ஏற்பன் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்த்தான்” இங்கு ஒரு முக்கியமான அரசியல் நெறிமுறை முன் வைக்கப் படுகிறது. வீடணன் அறவழியில் நின்று இராவணனிடமிருந்து வெளியேறி, அறத்தின் காவலனான இராமன் பக்கம் சேர்ந்து விட்டான். அதன் பின்னர், வெளியில் இருந்து இலங்கையின் அரசுப் பட்டத்தையும் ஏற்றிருக்கிறான். அத்துடன் இராமனுக்கும் வானரப் படைக்கும் பக்க பலமாக நின்று எல்லா ஆலோசனைகளையும் தகவல்களையும் கொடுத்து உதவி செய்து வருகிறான். அதிகாயன், இந்திரசித்தன், மூலபலப்படை முதலியவர்களைப் போர்க்களத்தில் முறியடித்து அழிக்கவும், களத்தில் மாண்ட வானரப்படைகளை மீண்டும் உயிர்ப்பிக்க மருத்துவ மலையைப் பயன் படுத்தவும் படைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும் பெரும் அளவில் உதவிக் கொண்டிருந்தான். இராமனுக்கு, இலக்குவன், சுக்கிரீவன், அனுமன், அங்கதன் ஆகியோர்களுடன் சேர்ந்து எந்த நேரத்திலும் துணையாக நின்றான். இந்திரசித்தனை நிகும்பலை யாகத்தைச் செய்ய விடாமல் தடுத்ததில் இலக்குவனுக்குப் பெரும் துணையாக இருந்தான். அத்துடன் தத்துவநிலையின் படி வீடணன், இராமனிடம் அடைக்கலம் அடைந்தவன். எனவே அத்தகைய சிறந்த நண்பனைச் சகோதரனைப் போன்றவனைத் தன் உயிர் கொடுத்தாவதுக் காப்பாற்ற வேண்டிய கடமை இராமனுக்கும் இலக்குவனுக்கும் இருக்கிறது. அதற்காகத் தன்னை அர்ப்பணித்து,