பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. æibugyló æJ¢lugyú 563 பெற்றவன். எக்கோடி யாராலும் வெலப்படாய் என்னும் வரம் கொண்டவன். அதாவது இராவணனுடைய உடம்பிலுள்ள ஒரு கோடியைக் கூட யாராலும் வெல்ல முடியாது என்ற உயர்ந்த வரத்தைப் பெற்றவன். அத்தகைய தனியாண்மை மிக்க வல்லமை படைத்தவனும் வீழ்ந்தான் என்பது இப்பாடலின் முக்கியமான கருத்து. இராவணன் கம்பீரமானவன். தனியாண்மைக் கொண்டவன். போரில் புறம் கொடாதவன். இராமனுடைய கணைகளை நெஞ்சில் ஏற்றவன். மரணம் அடைந்து மண்ணில் வீழ்ந்த போதும் அவனுடைய முகங்கள் பொலிவுற்று கம்பீரமாகக் காணப்பட்டன என்று கம்பனுடைய அற்புதமான கவிதை சிறப்பாகக் குறிப்பிடுகிறது. “வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வியத் தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேயத்” “தம்மடங்கு முனிவரையும் தலையடங்க நிலையடங்க சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்களம்மா !” இத்தகைய அற்புதமான கம்பனுடைய பாடல்களுக்கு உலக இலக்கியத்தில் ஈடு இணை எங்கே இருக்கிறது? கம்பன் தனது மகா காவியத்தின் மூலம் உலக இலக்கியத்தின் உச்சத்திற்கு எட்டியிருக்கிறான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். பின்னர் இராமன் தனது தேரை விசும்பில் செலுத்துமாறு கூறித்தனது தம்பியோடும் இதர படைத்தலைவர்களோடும் சேர்ந்து சென்று அந்த மாவீரன் இராவணன் மாண்டு கிடந்த காட்சியைக் காண்பதாகக் கம்பன் ஒரு அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறார். “தேரினை நீகொடு விசும்பில் செல்கென்ன மாதலியைச் செலுத்திப்பின்னர்ப்